Google search engine
இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் மற்றும் ஏவியேஷன் நிறுவனம் (ஐஏஏஏ) சார்பில் சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் 80-வது ஆண்டு விழா மற்றும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தின விழா கொண்டாட்டம் சென்னை விமான நிலையத்தில் நாளை (டிச.7) நடைபெறுகிறது. சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் (International Civil Aviation Organization- ICAO) 50 ஆண்டிலிருந்து அமைப்பின் தொடக்க நாளான டிசம்பர் 7-ம் தேதி சர்வதேச சிவில் விமானப்...
வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிச.7,8 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையிலிருந்து ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் இன்றும், நாளையும் (டிச.6,7) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 310 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து 80, மாதவரத்தில் இருந்து...
வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகப் பட்டினம் தொகுதி எம்.பி.வை.செல்வராஜ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது: இந்திய ரயில்வே துறை மிகப் பெரிய அளவில் சேவையாற்றும் ஒரு பொதுத் துறையாகும். தினசரி செய்தித்தாள்களில் எதிரே வந்த ரயிலுடன் மோதல், மொழி பிரச்சினையால் பயணிகளுக்கும் ரயில்வே ஊழியருக்கும் மோதல் என பல செய்திகள் வருகின்றன. இதை...
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு சென்னைஎம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரி்த்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது,இதற்கிடையே, இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் தாக்கல் செய்திருந்த மனு...
உண்மை தகவல்களை மறைத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்தும், ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தொடரக்கூடாது என தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து கடந்த 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ராஜ்மோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், தனது...
சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிக்கை அளிக்க ஆலோசகரை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. உலகின் 2-வது நீளமான (13 கி.மீ.) கடற்கரை என்ற பெருமைக்குரியது சென்னை மெரினா. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. அணிவகுத்து நிற்கும் தலைவர்களின் சிலைகள், வகை வகையான சிற்றுண்டியகங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள். இந்நிலையில், பொதுமக்களை...
மாற்றுத் திறனாளிகள் நலத்​துறை சார்​பில் ‘விழுதுகள்’ மறுவாழ்வு சேவை வாகனம், புற உலக சிந்​தனையற்ற நபர்​களுக்கான ஒப்புயர்வு மைய சேவைகள் ஆகிய​வற்றை முதல்வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செயதிக்​குறிப்பு: மாற்றுத் திறனாளி​களுக்கு உதவி உபகரணங்கள் வழங்​கும் திட்​டத்​தின்​ பொன்​விழா ஆண்டை முன்னிட்டு, தமிழகம் முழு​வதும் உதவி உபகரணங்கள் வேண்டி சுமார் 26 ஆயிரம் பேர் விண்​ணப்பித்​துள்ளனர். அவர்​களுக்கு ரூ.130 கோடி​யில் பெட்​ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட...
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது சட்டப்பேரவை தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கடந்த 2022 ஆக. 22-ம் தேதி முதல்வர் கடிதம் எழுதினார். இந்த திட்டத்துக்கான அரசாணை 2022 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் எம்எல்ஏக்கள் அடங்கிய மாவட்ட அளவிலான குழு அந்த கோரிக்கைகளை ஆய்வு செய்து, பல்வேறு பணிகளை அரசுக்கு...
அதானி நிறுவனம் வருவாய் ஈட்ட உதவியாக திமுக அரசு தனது மின் கொள்முதல் முடிவை மாற்றி கொண்டது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்தின் சிறிய வகை மீட்டர்களுக்கான ஒப்பந்தம், அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படலாம் என்ற செய்தி செய்திதாள்களில் வெளியாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.19,000 கோடி ஆகும். தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்...
மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களும், நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் பணியிடங்களும் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் உயர்...