திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நடப்பாண்டில் கல்விக்கு ரூ.44 ஆயிரம் கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.20,198 கோடி நிதிமட்டுமே தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் 3-ல் ஒரு பங்குக்கும் இது குறைவானது.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 1.39 சதவீதம் நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதேபோல,...
நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன்? – போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
admin - 0
மதுரை: நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம், கூடுதல் வட்டி,நிலம் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி முதலீடு வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி,நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில், வீரசக்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், கைது...
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக வழக்கு : சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக உத்தரவு
admin - 0
சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில்...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி – நெல்லூர் இடையே கரையை கடந்தது: இன்று 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
admin - 0
சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- நெல்லூர் இடையே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வட...
சென்னை: மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகிய அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்க என்சிஎம்சி (நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு) எனப்படும் ஒரே பயண அட்டையை பயன்படுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக எஸ்பிஐ வங்கி உதவியுடன்...
அனுமதி மறுக்க ஆளுநருக்கு தார்மீக உரிமை இல்லை: ஆயுள் கைதியின் முன்விடுதலை மனுவை அரசு மீண்டும் பரிசீலிக்க கோர்ட் உத்தரவு
admin - 0
சென்னை: ஆயுள் கைதியை முன்கூட் டியே விடுதலை செய்ய ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், அவரது மனுவைஅரசு மீண்டும் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஆளுநருக்கு எந்ததார்மீக உரிமையும் இல்லை.அமைச்சரவையின் முடிவுக ளுக்கு அவர் கட்டுப்பட்டவர் என்றும் நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதி என்பவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். இந்நிலையில் சென்னை...
சென்னை: உயர் அதிகாரிகளின் சுணக்கத்தால், பதவி உயர்வின்றி டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் 40-க்கும்மேற்பட்ட கூடுதல் எஸ்.பி பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், போதிய தகுதி இருந்தும் அந்த இடங்களில் பணியமர்த்தப்படாமல் டிஎஸ்பி எனப்படும் துணை கண்காணிப்பாளர்கள் (1996-ல் நேரடிஎஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்ட வர்கள்) ஓய்வு பெறுகின்றனர்.
இந்தப் பதவி உயர்வு வழங்கப்படாததால் அதன்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள இன்ஸ்பெக்டர்கள்...
அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ள போக சக்தி அம்மன் சிலையை மீட்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்
admin - 0
கும்பகோணம்: அமெரிக்காவில் ஏலம் விடப்படும் நிலையில் உள்ள போக சக்தி அம்மன் சிலையை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவில் தேவராயனபேட்டையில் உள்ள சுகுந்த குந்தளாம்பிகை அம்மன் உடனாய மச்சபுரீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்திருந்த ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தக் கோயிலின் இறைவியான போக சக்தி அம்மனின் பஞ்சலோக சிலை 1974-ம் ஆண்டு...
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மழைநீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை வாசலில் அடுக்கி வைத்த நிறுவனங்கள்
admin - 0
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிறுவனங்களுக்குள் மழைநீர் புகாமல் இருக்க வாசலில் மணல்மூட்டைகளை அடுக்கி வைத்தும், சுமார் 2 அடி உயர தடுப்புச் சுவர்எழுப்பியும் தொழில் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டன.
கனமழை பெய்யும்போது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிப்பது ஒவ்வோர் ஆண்டும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டது. தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் மழைநீர் உள்ளேபுகுந்து நஷ்டத்தை...
மின்தடை புகார்களுக்கு தீர்வு காண மின்னகத்தில் கூடுதல் ஊழியர்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
admin - 0
சென்னை: மின்தடை மற்றும் மின்பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக, மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மின்சாரத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்துறை அமைச்சர்செந்தில் பாலாஜி, சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ‘மின்னகம்’ சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரிய தலைமையகமான...










