Google search engine
பப்​ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்​எஸ்ஐ) அமைப்​பின் 46-வது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்​றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்​தின் துணை முதல்வர் விஜய் சர்மா தொடங்கி வைத்​தார். இந்த மாநாட்​டில் பல்வேறு துறை​களில் சிறப்பாக சேவை​யாற்றிய தனிநபர்​களுக்​கும், நிறு​வனங்​களுக்​கும் விருதுகள் வழங்​கப்​பட்டன. இதில், தமிழகம் மட்டும் 9 விருதுகளை தட்டிச் சென்​றுள்ளது. குறிப்​பாக, இந்தியன் ஆயில்...
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இன்றுடன் (டிச.26) 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது 2022 டிச. 26-ம்.தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. 220-க்கும் மேற்பட்டோரிடம்...
நாட்டின் பல்வேறு மாநில கைவினைக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெறும் சரஸ் மேளா, விற்பனை கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இக்கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை, பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து ‘சரஸ்’ எனும் விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி,...
அரசியல் கட்சித் தலைவர் மற்றும் மடாதிபதிகள் குறித்து பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கடந்த டிச.15-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பெண் வழக்கறிஞர் குறி்த்து தரக்குறைவாக விமர்சித்ததாக மற்றொரு வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாரும்...
கிறிஸ்​துமஸ் பண்டிகை​யையொட்டி தேவால​யங்​களில் சிறப்பு பிரார்த்​தனைகள் நடைபெற்​றது. நள்ளிர​வில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்​தனை​யில் ஏராள​மானோர் பங்கேற்​றனர். கிறிஸ்​து​வர்​களின் முக்கிய பண்டிகை​களில் ஒன்றான கிறிஸ்​துமஸ் பண்டிகை தமிழகம் முழு​வதும் நேற்று விமரிசையாக கொண்​டாடப்​பட்​டது. வீடு​களில் நட்சத்திர வடிவிலான விளக்​குகளை ஒளிர​விட்டு, இயேசு மாட்டு தொழு​வத்​தில் பிறந்ததை குறிக்​கும் வகையிலான குடில்​கள், கிறிஸ்​துமஸ் மரங்களை அமைத்து பண்டிகையை கிறிஸ்​து​வர்கள் இன்புற வரவேற்​றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் கிறிஸ்​துமஸ் பண்டிகை கொண்​டாட்டம் நேற்று...
வார இறுதி நாட்​களை​யொட்டி 586 சிறப்பு பேருந்​துகளை இயக்க ஏற்பாடு செய்​யப்​பட்டு​உள்​ளது. வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்ப​தால் டிச.27, 28 தேதி​களில் தமிழக அரசு போக்கு​வரத்​துக் கழகங்கள் சார்​பில் சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்ணா​மலை, திருச்சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர் உள்ளிட்ட இடங்​களுக்கு 485 பேருந்​துகளும், கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்ணா​மலை, நாகை, வேளாங்​கண்ணி,...
அண்ணா பல்கலை. வளாகத்​தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்​கப்​பட்ட சம்பவத்​துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரி​வித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறி​யிருப்​ப​தாவது: அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி: டெல்​லி​யில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்​தில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை முதல்வர் ஸ்டா​லின் பின்​நோக்கி தள்ளி​யிருப்​ப​தையே காட்டு​கிறது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்​களில் கூட பாது​காப்பாக இருக்க முடியாத அளவுக்கு சட்டம்...
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை அண்ணாமலை தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு விழா சென்னை அடையாறில் நேற்று கொண்டாடப்பட்டது. பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...
இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்ற உட்கட்சி பஞ்சாயத்து மீண்டும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்குப் போயிருக்கிறது. இதனால், அதிமுக கூட்டணிக்காக பாஜக தலைமை பகீரத பிரயத்தனம் செய்துவரும் நிலையில் சின்னத்தை வைத்து சித்து விளையாட்டுக் காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் அதிமுக-வினர் மத்தியில் அலையடிக்கிறது. ​ராணுவ கட்டுப்​பாட்டுடன் இருந்த அதி​முக-வுக்​குள் ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு அதிகாரப் போட்​டி​யால் ஏகப்​பட்ட குழப்​பங்​கள். அத​னால், மக்​கள் மன்​றத்​தில் அந்​தக் கட்சி தொடர் தோல்வி​களைச்...
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் நேற்று விடுத்த அறிக்கை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறி​யியல் கல்லூரி​யில் பயிலும் மாணவி ஒருவர் ராஜா அண்ணா​மலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் புகார் ஒன்றை அளித்துள்ளார் . அதில், “எனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்​தின் பின்​புறம் பேசிக் கொண்​டிருந்​த​போது அடையாளம் தெரியாத நபர் இருவரை​யும் அச்சுறுத்​தினார். பின்னர் அதே நபர் எனது நண்பரை தாக்​கி​விட்டு என்னிடம் பாலியல்...