Google search engine
2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி பணம் தொடர்பாக, கடந்த 3-ம் தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் நேற்று ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடி பணம்...
டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என டெல்லியில் அண்ணாமலை தெரிவித்தார். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன்...
நேரடி நெல் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கும் ஆட்சிக்கும் எதிராக விவசாயிகள் களம் காண்பார்கள் என்று தமிழ்நாடு சம்யுத்த கிசான் மோர்ச்சா மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்...
சென்னையில் பால் முகவர்களை திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழக பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பால் முகவர்களின் கடைகளுக்கு அதிகாலை நேரத்தில் டுவீலரில் வரும் மர்மநபர், மாநகராட்சி பணியாளர் என கூறிக் கொண்டு, உங்கள் பகுதியில் மழைநீரில்...
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டுக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் சென்னை கிண்டியில் நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் (கிங் இன்ஸ்டிடியூட்) செயல்பட்டு வருகிறது. இந்த...
நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை முறையாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள வடிவேல் என்பவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வம்,...
வானில் ஒரே நேரத்​தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை சென்னை​யில் பொது​மக்கள் ஆச்சரி​யத்துடன் கண்டு ரசித்தனர். சூரியக் குடும்பத்​தில் உள்ள கோள்கள் தங்கள் சுற்று​வட்டப் பாதை​யில் ஒன்றை ஒன்று சந்திக்​கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்​போது ஏற்படு​வதுண்டு. அதன்படி 6 கோள்கள் ஒரே நேர்​கோட்​டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்​வானது தற்போது அரங்​கேறி வருகிறது. அந்த வகையில் வெள்ளி, வியாழன், சனி, செவ்​வாய், நெப்​டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே...
பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும்போது போதுமான தகவல்களை தெரிவிக்காவிட்டால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் தங்கள் இணைப்பு அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னரே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. இதை முறையாக பின்பற்றும் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்....
கடல் ஆமை இறப்புக்கான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவொற்றியூர் முதல் கோவளம் வரை கடற்கரையோரங்களில் கடந்த வாரம் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவற்றின் திடீர் இறப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆமைகள் இறப்பு தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில்...
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் பெருங்களத்தூரில் ஜன.29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சி, 5-வது மண்டலம் பெருங்களத்தூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் ரூ.14 கோடியில் சீரமைக்கப்பட்ட பீர்க்கன்காரணை ஏரி, திமுக...