Google search engine
‘வேளச்சேரி-பரங்கிமலை இடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்கப்படும்’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கடந்த 1985-ம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, முதற்கட்டமாக 1997-ம் ஆண்டு சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே 9 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே ரூ.877 கோடி செலவில்...
இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் மன்மோகன் சிங் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்​டி​யுள்​ளனர். ஆளுநர் ஆர்.என்​.ரவி: பணிவு மற்றும் நேர்​மை​யின் உருவமாக விளங்​கியவர் மன்மோகன் சிங். இந்தியா பொருளா​தா​ரத்​தின் சவாலான காலகட்​டத்​தில் விலைம​திப்பற்ற பங்களிப்பை வழங்​கிய​வர். அவரது அர்ப்​பணிப்பு என்றும் நினை​வு​கூரப்​படும். துணை முதல்வர் உதயநிதி: இந்திய பொருளா​தா​ரத்தை மன்மோகன் சிங்​கின் காலகட்​டத்​துக்கு முன் - பின் என குறிப்​பிடும்​படியாக மாற்றியமைத்​தவர். அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பு. அதிமுக...
நெமிலி அடுத்த ஆட்டுப்​பாக்​கத்​தில் சாலை விபத்​தில் உயிரிழந்த ஹவில்​தார் குடும்பத்​துக்கு முதல்வர் மு. க.ஸ்​டா​லின் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்​கீடு செய்து நேற்று அறிவித்​தார். காஞ்​சிபுரம் மாவட்டம் பள்ளம்​பாக்கம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் செந்​தில்​வேல் (34). இவர், சென்னை தலைமை செயல​கத்​தில் உள்வட்ட பாது​காப்பு வாகன பிரிவு அணியில் ஹவில்​தாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்மிதா (27). தம்ப​தி​யருக்கு 2 குழந்தைகள் உள்ளன. செந்தில்வேல் தனது வீட்​டிலிருந்து இரு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ​யிடம் ஒப்படைக்க வேண்​டும் என்று அதிமுக பொதுச்​ செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை​யில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்​துக்​குள் ஞானசேகரன் என்பவர் அத்து​மீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்து​விட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்​றுள்​ளார். அதை செல்​போனிலும் படம் எடுத்​துள்ளார். அப்போது அவர் செல்​போனுக்கு அழைப்பு வந்த​தாக​வும், அவர் ஒருவரிடம் சார்...
அண்ணா பல்கலைக்​கழகத்​தில் நேற்று ஆய்வு மேற்​கொண்ட உயர்​கல்​வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அண்ணா பல்கலைக்​கழகத்​தில் கடந்த 23-ம் தேதி நடந்த அசம்பாவித சம்பவம் தொடர்பாக 25-ம் தேதி காவல்​துறை​யில் புகார் செய்​யப்​பட்​டது. புகார் மனு பெற்ற குறுகிய காலத்​திலேயே அந்த நபர் கைது செய்​யப்​பட்​டார். தொடர்ந்து விசாரணை நடந்​து​ கொண்​டிருக்​கிறது. பல்கலைக்​கழகத்​தில் நடந்த சம்பவம் தொடர்பாக போஷ் கமிட்​டிக்கு (பாலியல் துன்​புறுத்தல் தடுப்பு குழு) புகார் வரவில்லை. அதேநேரத்​தில்...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வட தமிழகத்​தில் வடகிழக்​குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான மழை அளவு​களின்படி வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் மழை பெய்​துள்ளது. அதிகபட்​சமாக திரு​வள்​ளூர் மாவட்டம் திருத்​தணி​யில் 8 செமீ மழை பதிவாகி​யுள்​ளது. புதுச்​சேரி, காரைக்​கால்: தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும்...
‘தவெகவுடன் கூட்டணி குறித்து இப்போதே எதுவும் சொல்ல முடியாது’ என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கினர். இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம்,...
‘திமுகவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறேன்’ என அண்ணாமலை தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், தந்தை பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கசிய விட்டதற்கு திமுகவினர் வெட்கப்பட வேண்டும். அண்ணாமலை மீண்டும்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் அன்புமணி: காவல்துறையின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது. மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை செய்தால், காவல்துறையோ மனரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளில் எத்தகைய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற...
குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரூ.37 கோடியில் வள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையிலான கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிச.30-ம் தேதி திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கடந்த 2000-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, வரும் டிச.30 முதல் ஜன.1-ம்...