அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 'யார் அந்த சார்?' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 'மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது, ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும்,...
அரசு பள்ளிகளில் இணைய வசதிக்கான சேவை கட்டணம்: பள்ளி கல்வி துறை ரூ.3.26 கோடி நிதி விடுவிப்பு
admin - 0
அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான சேவைக் கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.3.26 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை விடுவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள பிராட்பேண்ட் சேவைக் கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.50 கோடி நிலுவை வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையாகின.
இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2,973 உயர்நிலைப்...
“எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்.” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கைப்பட எழுதி வெளியிட்டுள்ள கடிதத்தில், “‘அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத்...
இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் தமிழ்நிலம் இணையதளம் வரும் டிச.31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவை வழங்கப்படும் ‘தமிழ்நிலம்’ இணையதளத்தில் விவசாயிகள் விவரப் பதிவேடு (Farmer Registry) தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக இன்று (டிச.28) காலை 10...
போக்குவரத்து போலீஸாருக்கு ஒலி இரைச்சலை தடுக்கும் நவீன ‘இயர்பட்ஸ்’ கருவி அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னையில் தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் பயணிக்கின்றன. அந்த வாகனங்களில் இருந்து வரும் சத்தம் 90 முதல் 150 டெசிபல் இருப்பதாக தெரியவருகிறது. இத்தகைய அதிக ஒலி இரைச்சல் அளவுகளை போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீஸார் தினமும் கேட்பதால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், மிகுந்த மன அழுத்தத்துக்கும்...
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கோட்டூர், மண்டபம் சாலை பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.அவரது குற்ற பின்னணி குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து...
‘பபாசி’ சார்பில் 48-வது சென்னை புத்தக காட்சி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
admin - 0
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48-வது சென்னை புத்தகக் காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படும். அந்த வகையில் 48-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா...
மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவை சேர்ந்த 1,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழகத்துக்கு எதிரே அதிமுகவினர் கடந்த 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீரென சாலை தடுப்பின் மீது ஏறி, தமிழக...
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படவுள்ளது.
இதற்கான...
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதிக்க வணிகர்கள் வலியுறுத்தல்
admin - 0
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் ஜி.சங்கரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 முதல் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் பெரும்பாலும் குறு நிறுவனங்களாக உள்ளன. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு...










