Google search engine
சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.குணசுந்தரி (52)...
இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் துயர் கரோனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகட்டுமேனிக்கு ஈவிரக்கமின்றி காவு வாங்கிச் சென்ற அந்த பெருந்தொற்று தந்துசென்ற வலியை இன்னமும் கூட பல குடும்பங்கள் அனுபவித்து வருகின்றன. பெருந்​தொற்றின் பேரழிவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் எந்தவிதத்​திலும் பாதித்து​விடக் கூடாது என்பதற்காக மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்​டங்களை அறிவித்தன. தாயையும் தந்தையையும் கரோனா​வுக்கு பறிகொடுத்த பிள்ளை​களுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சமும், மாநில...
இம்முறை புதுச்சேரியில் காங்கிரஸ் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் பேசி வரும் நிலையில், இரண்டு கட்சிகளுக்குமான உரசலும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி போட்டி​யிட்டது. 30 தொகுதி​களிலும் போட்டி​யிட்ட இந்தக் கூட்ட​ணியால் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடிந்தது. திமுக 6 இடங்களை பிடித்த நிலையில் திமுக-வை விட கூடுதலான இடங்களில்...
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிடக்கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில், உயர்மட்டக் குழுவை நியமிக்கக் கோரியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, கட்சியின்...
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்க கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியிருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே, கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த...
இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு பட்டப்பெயர் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். புழல் சிறையில் தன்னை தனிமைச்சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் கூறி பல்வேறு குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள போலீஸ்...
திமுக 1949-ல் தொடங்​கினாலும் தேர்தல் களத்​துக்கு 1957-ல் தான் வந்தது. ஆனால் சிலர் சிலர் கட்சி தொடங்​கியதுமே ஆட்சிக்கு வர துடிக்​கின்​றனர் என தவெக தலைவர் விஜய் குறித்து முதல்வர் மு.க.ஸ்​டா​லின் மறைமுகமாக விமர்​சனம் தெரி​வித்​துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த ஒரு மண்டலச் செயலாளர், 8 மாவட்டச் செயலாளர்கள், 5 ஒன்றிய செயலாளர்கள், 9 சார்பு அணி நிர்வாகிகள், 6 தொகுதி...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வர உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில்...
தாக்குதல் நடத்தும் நோக்கில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது நீலாங்கரை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சில தினங்களாக பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சீமானுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 22-ம் தேதி,...