கோவை மண்டலத்தை இம்முறை எப்படியாவது அதிமுக-விடம் இருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக காய் நகர்த்துகிறார் முதல்வர் ஸ்டாலின், ஆனால், கோவை மாநகராட்சி துணை மேயருக்கு எதிராக திமுக-வினரே கிளப்பும் சர்ச்சைகளைப் பார்த்தால் முதல்வரின் கனவு கனவாகவே போய்விடும் போலிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
கோவை மாநகராட்சியின் 92-வது வார்டானது முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டு. சட்டமன்றத் தேர்தலில் தனது ‘சக்தி’யை திரட்டி கோவை மாவட்டத்தின் 10...
மற்ற மாவட்டங்களில் போலீஸார் அப்படி இப்படி இருந்தாலும் தலைநகர் சென்னையில் பணியாற்றும் போலீஸார் கூடுதல் எச்சரிக்கையுடனும் முன் ஜாக்கிரதையுடனும் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் சின்னதாய் ஒரு தவறு செய்தாலும் உடனடியாக தலைமையிடத்தின் கவனத்துக்கு சென்று அதிரடி நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, இப்போது தலைநகர் போலீஸார் தான் வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல், தகாத உறவு என அனைத்துவிதமான சட்டவிரோத காரியங்களிலும் ஈடுபட்டு கைதாகி காவல்துறையை களங்கப்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு...
தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளிலும் திடக்கழிவு விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்
admin - 0
வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு பாடலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
தூய்மை பாரத இயக்கத்தை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, வீடு, வீடாக சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிப்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், திடக்கழிவுகளை அவரவர் இல்லத்திலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பை...
கணிதம், அறிவியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்: சென்னை மாநாட்டில் விஞ்ஞானிகள் வலியுறுத்தல்
admin - 0
கணிதம் மற்றும் அறிவியல் துறையை தேர்வு செய்து படிப்பதற்கும், அதில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமென விண்வெளி அறிவியல் ஆய்வு மாநாட்டில் விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சொசைட்டி (டாஸ்), தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், ராமன் ஆராய்ச்சி பவுண்டேஷன், பெங்களூரில் உள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனம் ஆகியவை சாா்பில், இளைஞருக்கான வானவியல் மற்றும்...
வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட். இளைஞர்கள், விவசாயிகள், மகளிருக்கான பட்ஜெட். 2047-ம் ஆண்டு நாடு வல்லரசாக இந்த பட்ஜெட் அடித்தளமாக அமைந்துள்ளது. கடந்த...
பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: இடிபாட்டு கழிவுகள் மேலாண்மை வழிகாட்டுதல் வெளியீடு
admin - 0
சென்னையில் அனைத்து பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கட்டிடக் கழிவுகளை மக்கள் ஆங்காங்கே கொட்டுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். கட்டிடக் கழிவுகள் கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.35 கோடியில் பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் வழியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 31 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 30 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர். இந்த வழித்தடங்களில்...
சக் ஷம் 2025: புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் – துறைமுக பொறுப்பு கழக தலைவர் வேண்டுகோள்
admin - 0
‘‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்’’ என, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘சக்ஷம் 2025’ நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாநில தலைவர் எம்.அண்ணாதுரை, இந்தியன்ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சில்லரை வர்த்தகம்), எம். சுதாகர் முன்னிலையில்,...
திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜுக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக டி.பி.எம்.மைதீன்கான், சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.ஜோசப்ராஜ் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைத் தலைவராகவும், சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலாளராக கே.அன்வர் அலி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
கோவை செல்வராஜ் மறைந்ததால்,...
மணலியில் மாநகராட்சி பயோகாஸ் உற்பத்தி தொழிற்சாலையில் வாயு அழுத்தத்தால் இயந்திரம் வெடித்துச் சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 22-வது வார்டு பகுதியான மணலி பல்ஜிபாளையம், வழுதலைமேடு சாலையில் சென்னை மாநகராட்சியின் பயோகாஸ் (Bio Gas) உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தனியார் ஒப்பந்த நிறுவனம் நடத்திவரும் இந்த ஆலையில், திருவொற்றியூர், மணலி,...










