Google search engine
சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின்இணைப்புகளில் உச்சநேர மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க டிஓடி மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின்நுகர்வானது தினசரி காலை, மாலையில் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாகவும் மற்ற நேரங்களில் 15 ஆயிரம் மெகாவாட்டாகவும் உள்ளது. இதனால், தொழிற்சாலைகள் போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ‘பீக் ஹவர் சார்ஜ்’ எனப்படும் உச்சநேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி, காலை 6 முதல் 10 மணி...
தென் தமிழகத்தில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 21, 22, 23 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை...
குடியரசு தின விழாவுக்கான முதற்கட்ட அணிவகுப்பு ஒத்திகை மெரினா காமராஜர் சாலையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்ற உள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள்: அந்த நிகழ்ச்சியில் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை...
தமிழகத்தில் மத்திய அரசின் நிதி ஆதாரத்தில் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் நாடாளுமன்ற குழுவினர் கேட்டறிந்தனர். சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற குழு தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம்கோபால் யாதவ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், மாநிலங்களின் சுகாதார திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த குழு உறுப்பினர்கள் சென்னையில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினர். தமிழக சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹு, தேசிய நலவாழ்வு...
சென்னை கடற்கரை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான காரணங்கள் மற்றும் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரில் திருவொற்றியூர் முதல் நீலாங்கரை வரையும், அங்கிருந்து கோவளம் வரையும் கடந்த வாரம் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன. 500-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆமைகள் கடல்...
வளர்ப்பு நாய்களுக்கான கண்காட்சியில் 5 பரிசுகளை வென்ற, காவல் மோப்ப நாய் பிரிவுக்கு காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார். குற்ற வழக்குகளில் துப்புத்துலக்க, கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதைப் பொருட்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் காவல் துறையினருக்கு எளிதில் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க மோப்ப நாய் படைப் பிரிவு உதவி வருகிறது. இதற்காக மோப்ப நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால், வழக்கின் பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள்...
பாமக தலைவர் அன்புமணி நேற்று எக்ஸ் வலைதளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: துணைவேந்​தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக்​குழு​வின் வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்​தில் மாநில உரிமை​களைக்காக்க வேண்​டும் என்பதற்காக பாஜக ஆட்சி நடக்காத மாநிலங்​களின் முதல்​வர்​களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கடிதம் எழுதி​யுள்​ளார். அதேவேளை​யில், சமூகநீ​தியை காப்​ப​தற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்​கெடுப்பை நடத்தி முடித்​துள்ள மாநில முதல்​வர்​களுக்கு கடிதம் எழுதி முதல்வர் ஸ்​டா​லின் கேட்​டறிவாரா. யுஜிசி விதி​களில் ஒருவேடம், சாதிவாரி...
சென்னையின் 2-வது விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பரந்தூர் போராட்ட குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகள், விவசாய நிலங்களை அழிப்பதை ஏற்க முடியாது. இதற்காக சட்ட நடவடிக்கைகள் தேவைப்பட்டாலும் எடுப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார். சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள...
மாட்டு கோமியத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாட்டுப் பொங்கலையொட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, ‘‘மாட்டு கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை...