Google search engine
சென்னையில் அனைத்து பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் கட்டிடக் கழிவுகளை மக்கள் ஆங்காங்கே கொட்டுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். கட்டிடக் கழிவுகள் கொட்டும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.35 கோடியில் பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 31 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 30 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர். இந்த வழித்தடங்களில்...
‘‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்’’ என, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘சக்ஷம் 2025’ நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாநில தலைவர் எம்.அண்ணாதுரை, இந்தியன்ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (சில்லரை வர்த்தகம்), எம். சுதாகர் முன்னிலையில்,...
​தி​முக​வில் இணைந்த திவ்யா சத்யராஜுக்கு தகவல் தொழில்​நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்​செய​லாளர் துரை​முருகன் வெளி​யிட்ட அறிவிப்பு: திமுக சிறு​பான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக டி.பி.எம்​.மைதீன்​கான், சிறு​பான்மை பிரிவு துணைச் செயலா​ளராக பொறுப்பு வகித்து வரும் வி.ஜோசப்​ராஜ் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைத் தலைவ​ராக​வும், சிறு​பான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலா​ளராக கே.அன்வர் அலி ஆகியோர் நியமிக்​கப்​படு​கின்​றனர். கோவை செல்​வ​ராஜ் மறைந்​த​தால்,...
மணலியில் மாநகராட்சி பயோகாஸ் உற்பத்தி தொழிற்சாலையில் வாயு அழுத்தத்தால் இயந்திரம் வெடித்துச் சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 22-வது வார்டு பகுதியான மணலி பல்ஜிபாளையம், வழுதலைமேடு சாலையில் சென்னை மாநகராட்சியின் பயோகாஸ் (Bio Gas) உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தனியார் ஒப்பந்த நிறுவனம் நடத்திவரும் இந்த ஆலையில், திருவொற்றியூர், மணலி,...
காசி தமிழ் சங்கமங்​களால் இந்தி மொழி பேசுபவர்​களிடம் தமிழர் பெருமை பல மடங்கு உயர்ந்​திருப்​பதாக வாராணசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்கம் தெரி​வித்​துள்ளார். பிரதமர் மோடி​யின் மக்களவை தொகு​தி​யில் முக்கிய நிர்​வாகப் பணியாற்றும் தென்​காசி மாவட்டத் தமிழரான அவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி: மகா கும்​பமேளாவால் வாராணசி​யிலும் குவி​யும் கூட்​டத்தை எப்படி சமாளிக்​கிறீர்​கள்? மகா கும்​பமேளா​வில் வசந்த பஞ்சமிக்கு பிறகு பெரும்​பாலான அகாடா துறவிகள் வாராணசிக்கு இடம்​பெயர்​வார்​கள்....
அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி திமுக-வில் இணையப் போகிறார் என்று வதந்திகள் வட்டமடித்த நிலையில், அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக்கி இருக்கிறார் பழனிசாமி. இவரோடு சேர்ந்து, முன்னாள் எம்எல்ஏ - வான ஆர்.சின்னசாமியும் அமைப்புச் செயலாள ராக்கப்பட்டிருக்கிறார். இப்படி ஒரே மாவட்டத்தில் இருவருக்கு திடீரென அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது. அ​திமுக கோட்டை எனச் சொல்​லப்​படும் கோவை மாவட்​டத்​தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்​பவர்...
திமுக-வில் இனி வரும் காலம் உதயநிதியின் காலமாகத்தான் இருக்கும் என்பதால் திமுக முக்கிய தலைகள் பலரும் தங்களுக்குப் பதிலாக தங்களது வாரிசுகளை முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அண்ணாச்சியும் தனது மகன் ரமேஷை 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார். ​சாத்தூர் ராமச்​சந்​திரன் என அழைக்​கப்​படும் அமைச்சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன் எம்ஜிஆர் அமைச்​சர​வையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்​தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலி​தாவுக்கு பக்கபலமாக...
திமுகவில் நடைபெறுவது களையெடுப்பல்ல; சீரமைப்பு என்றும் அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட யாரும் அசைக்க முடியாது என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: நாளுக்குநாள் திராவிட மாடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் அயராமல் உழைப்பதால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. தமிழக மக்கள் நமக்கு...
கோயம்பேட்டில், பயணியுடன் மோதிக் கொண்ட மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மதுரவாயல் வடக்கு மெட்ராஸ் சாலையை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் கடந்த 12-ம் தேதி இரவு கிண்டியில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து, மாநகரப் பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். பின், மதுரவாயலில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல பேருந்தில் ஏற முற்பட்டபோது, அப்பேருந்து நிற்காமல் சென்றது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலைய நேரக்...