Google search engine
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மார்ச் 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை...
கோவை பாரதியார் பல்கலை.யில் 2016-ல் 500 கணினிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவை ரூ.84.57 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளி கோரி இவற்றைக் கொள்முதல் செய்ததால் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பல்கலை. தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த சிண்டிகேட் கூட்டத்ல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி, பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கணபதி,...
தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டுகளில்...
ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பணிகள் முடிவுற்ற அரசுத் துறை கட்​டிடங்​களை​யும் திறந்து வைத்​தார். செங்​கல்​பட்டு மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கம் அரு​கில் நேற்று நடை​பெற்ற அரசு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​றார். அதில், ரூ.280.38 கோடி மதிப்​பில் 47 முடிவுற்ற கட்​டிடங்​கள் மற்​றும் நலத்​திட்​ட பணி​களை திறந்து வைத்​தார். தொடர்ந்​து, நகராட்சி நிர்​வாகத் துறை...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பெண் நீதிபதிகளை கவுரவிக்கும் விழா மற்றும் 1,020 இளம் வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் பதிவு செய்யும் நிகழ்வு, உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து, நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் கீழமை நீதிமன்ற...
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரான பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தயாநிதிமாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என...
உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) சென்னை விஜடி இணைந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தின. நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை கண்காட்சியுடன் ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட சாலை பாதுகாப்பு தயாரிப்புகளான ஹெல்மெட், ஆட்டோமொடிவ் கண்ணாடி மற்றும் டயர்கள் ஆகியவற்றின் உயிர் காக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை தாம்பரம் கமிஷனரேட்டின் தலைமை போக்குவரத்து வார்டன் எஸ்.தாண்டவமூர்த்தி...
சீமான் வீட்டில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டதாக துப்பாக்கியுடன் கைதான பாதுகாவலர் உள்ளிட்ட இருவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர். சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சுபாகர் கிழித்ததால் போலீஸாருடன்...
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப் பகுதிகளைடொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதால் இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில்...
தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திக தலைவர் கி.வீரமணி ஆகியோர் தொடர்ந்து இவ்வாறு தரம் தாழ்ந்து பேசினால் தமிழகம் அமைதி கொள்ளாது எனவும் எச்சரித்துள்ளனர். இரா.முத்தரசன்: புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித் துறைக்கு,...