சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் பல இடங்களில் சாரல் மழை மட்டுமே காணப்பட்ட நிலையில் சேலம், ஏற்காடு உள்பட சில இடங்களில் கனமழை கொட்டியது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஓமலூரில் 18 மிமீ, சங்ககிரியில் 16.1 மிமீ, தலைவாசலில் 15 மிமீ, மழை...
சென்னை: தென்மேற்கு பருவமழை இன்று (அக்.15) இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கியுள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில்...
சென்னை: “ஒருநாள் மழைக்கே சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை அரசு எவ்வாறு பாதுகாக்கிற போகிறது?” என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளபக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (திங்கள்கிழமை) இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் மாநகர் முழுவதுமே வெள்ளக்காடாக...
சென்னை: தமிழகத்தில் சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவு திறன் 9,270 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், சூரியசக்தி மின் நிறுவு திறனில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பெரிய நிறுவனங்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கும், எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கும் விற்பனை செய்வதற்கு வேண்டி அதிக திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையங்களை...
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் ரூ.5.81 கோடி மதிப்பில் 4 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.68.36கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2,226 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,755 கோடி மதிப்பிலான 7,005.70 ஏக்கர் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும்,...
ராமேசுவரம்: தமிழகத்தின் தென்கோடியில் உள்ளராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாக 1931-ம் ஆண்டு அக்.15-ம் நாள் பிறந்தார் அப்துல் கலாம். அவரின் முழு பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர். ஒரு சகோதரி. 1958-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பணியாற்றினார். அப்துல்...
சென்னை: இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு,பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, விசிக துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி,ஆளூர் ஷா நவாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலுக்கு மத்திய அரசு...
பெரம்பலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை ஒப்பந்தஅடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அக். 24-ம் தேதி ஆம்னி பேருந்துஉரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பண்டிகைக் காலங்களில் கூடுதல்கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் செயலி மூலமாக முன்பதிவு...
சென்னை: பல்லாவரத்தில் ஓட்டல் கண்காணிப்பாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என போலீஸ் அதிகாரிவிளக்கம் அளிக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் (30). இவர் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில், பிரபல தனியார் ஓட்டல் ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச்12-ம் தேதி ஓட்டலுக்கு வந்த அனகாபுத்தூரை சேர்ந்த சங்கர் (55) மற்றும் அவரது...
சென்னை: கனமழை காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்களுக்கு மூடப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைவெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழைபெய்யும் என வானிலை ஆய்வுமையத்தால் அறிவிக்கப்பட்டு, ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 15-ம் தேதி (இன்று) முதல் 18-ம் தேதி வரை 4...