ஜார்ஜ் டவுனில் ரூ.9.85 கோடியில் புனரமைக்கப்பட்ட புராதனமான பதிவுத்துறை கட்டிடத்தில் அலுவலகங்கள் திறப்பு
admin - 0
சென்னை ஜார்ஜ்டவுனில் ரூ.9.85 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட புராதனக் கட்டிடத்தில் பதிவுத் துறை அலுவலகங்களை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
பதிவுத் துறைக்கு சொந்தமான 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதனக் கட்டிடம் சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. இக் கட்டிடம் கடந்த 1864-ம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டிடக்கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கது.
இப்புராதன கட்டிடம் மெட்ராஸ் நாட்டு தளக்கூரை (Madras...
திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தையின் பெயர் ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’
admin - 0
திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தைக்கு 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயரிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திருத்தணியில் நீண்ட காலமாக காமராஜர் பெயரில் காய்கறி சந்தை இயங்கி வந்தது.
இச்சந்தை இடித்து அகற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக சந்தை கட்டப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு சந்தை என பெயர் வைக்க நகராட்சி மன்ற கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு நாம்...
கோடை காலத்தை ஒட்டி ஆவின் மோர், ஐஸ் கிரீம், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினசரி 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில், பல வகைகளாக பிரிக்கப்பட்டு...
பாலியல் வன்கொடுமைக்குள்ளான அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூலம் வெளியானது ஜீரணிக்க முடியாதது: பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு
admin - 0
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ பொது வெளியில் வெளியானது ஜீரணிக்க முடியாத ஒன்று. அதை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர்...
8 ஆண்டாக வரி செலுத்தாததால் அபராதத்துடன் ஜிஎஸ்டி செலுத்தக்கோரி கோயில்களுக்கு நோட்டீஸ்: செல்வப்பெருந்தகை கண்டனம்
admin - 0
கடந்த 8 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி. மற்றும் அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோயிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கோயில்கள் மதம் தொடர்பானவை என்பதாலும் மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் அவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஆண்டு...
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இசைக்கல்லூரி அருகே சாலை பணிக்காக மரங்கள் வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில பசுமைவழிச் சாலை - துர்காபாய் தேஷ்முக் சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் பசுமைவழிச் சாலை வழியாக அடையார், கிண்டி பகுதிகளுக்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.26 கோடியில் சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு, பசுமைவழிச் சாலையில் இருந்து,...
இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று தான் கூறியதாக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாக சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில்...
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறி; யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல்: எல்.முருகன் குற்றச்சாட்டு
admin - 0
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் பாஜக மண்டல் அலுவலகத்தை நேற்று எல்.முருகன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ரயில்வே, வங்கி, யுபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் தமிழில் எழுத பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஐநாவில் முதன் முதலில் தமிழ்...
வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும், என வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை...
தொகுதி மறுவரையறை பாதிப்புகளை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
admin - 0
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்கள் குழு வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நேற்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்...









