சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு பதியப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வளசரவாக்கம் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் ரீதியாக சீமான் வன்கொடுமை செய்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த...
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருத்தணியில் காந்தி சிலை அகற்றம்: தமாகா தலைவர் உள்ளிட்டோர் கண்டனம்
admin - 0
திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மகாத்மா காந்தி சிலையை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பேருந்து நிலையம் அருகே மபொசி சாலையில் கடந்த 1949-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காந்தி சிலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, வியாபாரிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, நேற்று அதிகாலை திருத்தணி...
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார். தமிழக அரசு நடத்தும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி.யாக பணியில் சேர்ந்தவர். பின்னர், ஐபிஎஸ் ஆக அந்தஸ்து பெற்றார். இவர்...
உடல்நலக் குறைவால் காலமான எஸ்.ஐ குடும்பத்துக்கு சக போலீஸார் ரூ.15 லட்சம் நிதி திரட்டினர். அதை சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று எஸ்.ஐ குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபு என்பவர், பணியில் இருந்தபோது உடல்நலக் குறைவால் கடந்தாண்டு செப்.11-ம் தேதி காலமானார்.
இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி மற்றும் சாய்சந்தீப்(23), ஶ்ரீராகவ்(19),...
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 36.1 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலையாக சேலத்தில் 15.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன்...
தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக மண்டலத் தலைமையகங்கள் முன்பு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பகுதியாக சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டத்தில், ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன் உடனே வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவையை முழுமையாக வழங்க வேண்டும். சென்னையில் மினிபஸ்சை அரசேஇயக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில்,...
கிராமப்புறத்து மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் கொண்டு வரப்பட்டது தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம். இதன் மூலம் கிராமப்புறத்து மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது உறுதிசெய்யப்படுகிறது.
இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.319 ஊதியம் வழங்கப்படுவதாக கணக்குகள் சொன்னாலும், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக ரூ.270 மட்டுமே பயனாளிகளின் கைக்குப் போய்ச் சேர்வதாகச் சொல்கிறார்கள். இதுவுமில்லாமல் சில இடங்களில் போலியான ஆட்கள் மூலம்...
“செங்கோட்டையனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை!” – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
admin - 0
“என்னை சோதிக்காதீர்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேதனைக் குரல் எழுப்பி இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியனிடம் செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசினோம்.
செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறதே? - அண்ணன் செங்கோட்டையன் ஆதங்கத்தில் இருக்கிறார், வருத்தத்தில் இருக்கிறார், கோபத்தில் இருக்கிறார் என்பதற்கெல்லாம் அவரே நேற்று முன்தினம் தெளிவாக பதில் கூறி விட்டார். “இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும், வலுவாக...
தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை வரும் 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள்...
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிலேயே அதிகபட்ச மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: அண்ணாமலை உறுதி
admin - 0
தமிழகத்தில் பாஜகவின் வெற்றி தாமதப்பட்டிருக்கிறது. 2026-ல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வழங்கப்படும் என்று சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை...










