மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீ்ழ் அறிவித்தார். முன்னதாகவே அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், முதல்வரின் அறிவிப்பை ஏற்க மறுத்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு...
மாநில சுயாட்சி தொடர்பான முதல்வரின் அறிவிப்பு: பேரவையில் திமுக, பாஜக, காங்கிரஸ் கடும் வாதம்
admin - 0
மாநில சுயாட்சி தொடர்பான முதல்வரின் அறிவிப்பு குறித்து சட்டப்பேரவையில் திமுக, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன்: இந்தியாவின் மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன என்று அம்பேத்கர் தெரிவித்துள்ளார். மொழிவாரி மாநிலத்தில் அவருக்கு விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை. இந்திய...
எதிர்க்கட்சிகளின் கேள்வியை தவிர்ப்பதற்காக அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் கடந்த ஏப்.5-ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய திமுக மூத்த அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு வருத்தம் தெரிவித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று கூடிய சட்டப்பேரவை...
அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு: பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
admin - 0
திமுக அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பேச பேரவை தலைவர் அனுமதிக்கவில்லை என வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பொருள் குறித்து பேச பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்காததால், அதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம்...
மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை திமுக தூண்டுவதாக, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டு பேசினார். அப்போது அதை ஏற்காமல் பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110...
கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழில் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2022-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தக் கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும்.
புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19-ம் தேதி முதல்...
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: ஓசூர் அருகே பல மணி நேரம் நிறுத்தப்பட்ட லாரிகள்
admin - 0
டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தன.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் அனைத்தும், தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டன.அதேநேரம், வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா...
‘பிரதமர் மோடி எங்களுக்கு சகோதரர் போன்றவர்’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் ‘மோடி ஸ்டோரி’ என்ற சேனலுக்காக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று பிரதமர் மோடி அழைப்பார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஒவ்வொரு முறையும் விஜயகாந்தின் பிறந்த நாளன்று அவரே தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார். விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதபோது என்னைத்...
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றும் விஜய் கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் பீம ஜோதியை எடுத்து செல்ல பாஜக பட்டியல் அணியினருக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. சுதந்திரத்துக்காக போராடியவர்கள், ஜனநாயகத்துக்கு அடித்தளமிட்டவர்களுக்கு...
தமிழ்நாட்டில் இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. தடைக்காலத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில்...










