திருவிழாவுக்கு மின்விளக்கு கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
admin - 0
விருதுநகர் அருகே கோயில் திருவிழாவுக்காக அலங்கார மின்விளக்குகள் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள காரிசேரியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று 45-வது நாள் மண்டல பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கிராமத்தில் ஒலிபெருக்கி மற்றும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும்...
அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அச்சப்படுகிறார் என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இழுபறி இல்லாத கூட்டணி: அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால், அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு இடம்...
துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் செயல்படக் கூடாது என நிர்வாகிகளுக்கு வைகோ அறிவுறுத்தி உள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியால் கட்சியில் இருந்து வெளியேறினர்....
பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்காது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
admin - 0
பாஜக கூட்டணியால் அதிமுக வுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்காது எனcccc தெரிவித்தார். வக்பு சட்ட திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே அனைத்து ஜமாத் மற்றும் உலமாக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்தம் தொடர்பாக திமுக உள்ளிட்ட...
தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
‘குரோதி’ ஆண்டு நிறைவடைந்து, ‘விசுவாவசு’ தமிழ் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி, புத்தாடைகள் அணிந்து உறவினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களை இறைவனுக்கு படைத்து, உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
மலையாள புத்தாண்டான விஷு திருநாளும்...
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்திய, பிந்திய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி முழுவதும் பவுர்ணமி இருந்தது. இதையடுத்து அன்றைய தினம்...
தமிழகத்தில் இன்றுமுதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., திருச்சி மாவட்டம் துறையூர், நீலகிரி மாவட்டம் நடுவட்டம்...
போக்குவரத்து கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு
admin - 0
போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை வைத்துள்ளதால் ஊழியர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு...
வலுவை இழந்துவிட்டதால் தான் கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்ததா அதிமுக? – நயினார் நாகேந்திரன் பளிச் பதில்
admin - 0
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக பாஜக தலைவராக வந்திருக்கிறார் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன். வந்ததுமே முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு காலணி வாங்கித் தந்து அணியவைத்து அவரது சபதத்தை தற்காலிகமாக முடித்துவைத்திருக்கிறார்.
ஒருவிதமான அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் ஈர்க்கவே, கட்சி விதிகளை எல்லாம் தளர்த்தி நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கி இருக்கிறது பாஜக தலைமை என்று சொல்லப்படும் நிலையில்,...
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம்: சென்னையில் ஏப்.16-ம் தேதி நடக்கிறது
admin - 0
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக வேந்தராக இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒவ்வோர் ஆண்டும் துணைவேந்தர்களுடன் உயர்கல்வி தொடர்பாக ஆலோசனை நடத்துவது வழக்கம். இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது.
இதையடுத்து, மசோதாக்கள் குறித்து அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. துணைவேந்தரை...










