பேரவைக்கு வராமல் அமைச்சர் பொன்முடி ஆப்சென்ட்

0
37

எ​திர்க்​கட்​சிகளின் கேள்​வியை தவிர்ப்​ப​தற்​காக அமைச்​சர் பொன்​முடி சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் நேற்று பங்​கேற்​க​வில்லை என கூறப்படுகிறது. தந்தை பெரி​யார் திரா​விடர் கழகம் சார்​பில் சென்​னை​யில் கடந்த ஏப்​.5-ம் தேதி நடத்​தப்​பட்ட நிகழ்ச்​சி​யில் பேசிய திமுக​ மூத்த அமைச்​சர் பொன்​முடியின் சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு வருத்தம் தெரிவித்தும் அவரை அமைச்​சர் பதவி​யில் இருந்து நீக்க வேண்​டுமென அதி​முக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றன.

இந்​நிலை​யில் நேற்று கூடிய சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் பொன்​முடி பங்​கேற்​க​வில்​லை. மாநில சுயாட்சி குறித்து 110 விதி​யின்​கீழ் முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் அறி​விப்பை வெளி​யிட்​ட நிலையில் திமுக உறுப்​பினர்​கள் தவறாமல் ஆஜராகி இருந்​தனர். ஆனால் பொன்​முடி மட்டும் வரவில்​லை. எனினும், முதல்​வரின் தீர்​மானத்தை சமூக வலைத்​தளங்​களில் அவர் வரவேற்​றிருந்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here