ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

0
20

ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் செயல்​பட்டு வரும் ஹூண்​டாய் மொபிஸ் கார் உதிரி​பாகங்​கள் தயாரிப்பு தொழிற்​சாலை​யில் நேற்று ஏற்​பட்ட பயங்கர தீ விபத்​தில் பல கோடி மதிப்​பிலான உற்​பத்தி பொருட்​கள் எரிந்​த​தாக தகவல் வெளி​யாகி​உள்​ளது.

காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் ஹூண்டாய் மொபிஸ் என்ற நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. கார்​களுக்​கான டேஷ்​போர்​டு, ஏர்​பேக் தயாரிக்​கும் பிரி​வில் நேற்று திடீரென தீப்​பற்​றியது.

அப்​பகு​தி​யில் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்த பிளாஸ்​டிக், எளி​தில் தீப்​பற்​றக்​கூடிய மூலப்​பொருட்​களால் வேக​மாக தீ பரவிய​தாக கூறப்​படு​கிறது. தீ விபத்​தால் தொழிற்​சாலை வளாகம் முழு​வதும் அடர்ந்த கரும்​புகை சூழ்ந்​தது.

தகவலறிந்த ஸ்ரீபெரும்​புதூர், இருங்​காட்​டுக்​கோட்​டை, ஒரகடம் உள்​ளிட்ட பகு​தி​களி​லிருந்து 6-க்​கும் மேற்​பட்ட தீயணைப்பு வாக​னங்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து தீயை கட்​டுப்​படுத்​தும் பணி​யில் ஈடு​பட்​டன.

பல மணி நேர போராட்​டத்​துக்​குப் பிறகு தீ பரவாமல் தடுக்​கப்​பட்​டது. தீ விபத்து ஏற்​பட்​டதும் தொழிற்​சாலை​யில் பணி​யாற்​றிய 500-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​ட​தால் உயிர்​சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்​தில் தயாரித்து வைக்​கப்​பட்​டிருந்த டேஷ்​போர்​டு​கள், ஏர்​பேக்​கு​கள் மற்​றும் பிற உதிரி​பாகங்​கள் முற்​றி​லும் எரிந்து சேதமடைந்​தன. சேத மதிப்பு பல கோடியைத் தாண்​டும் என முதற்​கட்​ட​மாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கோடை கால வெப்​பம் மற்​றும் மின் கசிவு உள்​ளிட்ட காரணங்​களால் தீ விபத்து ஏற்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்ள நிலை​யில், ஸ்ரீபெரும்​புதூர் காவல்​துறை​யினரும் தீயணைப்​புத் துறை​யினரும் இணைந்து தீ விபத்​துக்​கான காரணம் குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here