காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வாரியம் வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் இறைவன்காடு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 150 குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியினர்...
இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து அதிமுக சார்பில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக...
இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் கணவர் வீட்டார்: புதுமணப் பெண் நெல்லை காவல் ஆணையரிடம் புகார்
admin - 0
இருட்டுக்கடையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்கின்றனர் என்று புதுமணப் பெண் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். நெல்லை டவுனில் ‘இருட்டுக்கடை’ என்ற பெயரில் உலகப் பிரசித்திபெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியின் மகள் ஸ்ரீகனிஷ்கா. இவர், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.
இதுகுறித்து கவிதா ஹரிசிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எனது மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கும்,...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை திடீரென பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது. தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் வாட்டத் தொடங்கியது. அவ்வப்போது வெப்பநிலை உயர்ந்தும் காணப்பட்டது. கடந்த 12-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 9 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காலை முதல்...
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாகக் கர்நாடகாவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகளிடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால், நேற்று 2-வது...
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும்,...
புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
admin - 0
தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க , நாளை மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, துறைகள் தோறும் மானிய கோரிக்கைள் குறித்த விவாதம் வரும் ஏப்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, தமிழக அரசின் பட்ஜெட்டுக்கான ஒப்புதல் வழங்கவும், புதிய தி்ட்ட அறிவிப்புகள் குறித்த ஒப்புதலுக்காகவும் தமிழக அமைச்சரவைக்கூட்டம்...
தகுதியானவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு பாலகுருசாமி வேண்டுகோள்
admin - 0
‘எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல் தகுதியான, நேர்மையான, ஊழல் கறைபடியாதவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 பல்கலைக்கழக சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் இசைவு தெரிவிக்க வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய உயர்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல். இத்...
அறநிலையத்துறையில் மறுபதிப்பு செய்யப்பட்ட 300 அரிய ஆன்மிக நூல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
admin - 0
இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவால் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறையானது சமய நெறிகளை பரப்பிடும் வகையில் அரிய ஆன்மிக நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்யும் பணிகளை மேற் கொண்டு வருகிறது. மேலும், அந்த நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் தகோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களையும் அமைத்து...
மக்களின் அடிப்படை உரிமைகளை கூட மத்திய அரசிடம் போராடி பெற வேண்டியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் கருத்து
admin - 0
மாநிலங்களி்ன் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்பில் அவர் பேசியதாவது: நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதை...










