Google search engine
அமைச்சரவையில் விடுவிக்கப்பட்ட பொன்முடி, செந்தில்பாலாஜி இருவரும் 2-வது நாளாக பேரவைக்கு வரவில்லை. தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் அமைச்சரவையின் முதல் வரிசையில் இருந்த பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்த செந்தில்பாலாஜி பெயரும் நீக்கப்பட்டு, 3-வது வரிசைக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் பேரவைக்கு வரவில்லை. இந்த கூட்டத்தொடர் இறுதி நாளான நேற்று இருவரும் பேரவைக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது....
கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் தரப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து 20 அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: இந்த துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர்க்கை குறைவாக உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும்....
காஜி , காஜியத் மற்றும் ஷரியா போன்ற முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும், அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர் மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.50,000 வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார். அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல...
இப்போதைக்கு சாக்குப் போக்குச் சொன்னாலும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்குள்ளும் புது உற்சாகம் பீரிட்டு அடிக்கிறது. “வரட்டும் பார்க்கலாம்” என விட்டேத்தியாய் இருந்தவர்கள் எல்லாம் இப்போது தங்களுக்கான தொகுதிகளுக்கு துண்டு போட்டு இடம் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2021 தேர்தலில், விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள 7 தொகுதி​களில் 4 தொகுதிகளை திமுக-​வும், 2 தொகுதிகளை அதிமுக-வும் வென்றன. ஒரே ஒரு தொகுதியை மட்டும்...
உலக நடன தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் கடலுக்கு அடியில் கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில் சிறுவர், சிறுமி நடனமாடினர். ஆண்டுதோறும் ஏப். 29-ம் தேதி உலக நடன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை ஓஎம்ஆர் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தின் மகள் தாரகை ஆராதனா(11), மாணவர் அஸ்வின் பாலா (14) ஆகியோர் நீருக்கடியில் நடனம் ஆடினர். இதுகுறித்து...
பிரதானக் கட்சிகளின் தலைமைகள் எல்லாம் 2026 தேர்தலுக்கான கூட்டணிகளை கட்டமைப்பதில் மும்முரம் காட்டி வரும் நிலையில், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு தோதான தொகுதிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், மதுரை மாவட்​டத்​தி​லுள்ள 10 சட்டமன்றத் தொகுதி​களில் குறைந்​த​பட்சம் ஒரு தொகுதியை கூட்டணித் தலைமை​யிடம் காங்கிரஸ் கேட்டுப் பெறுவது வழக்கம். அதன்படி கடந்த தேர்தலில் மேலூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்​கியது திமுக. கடந்த...
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா...
தமிழகத்தில் இன்றுமுதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை...
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உட்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த...
திமுக கூட்டணி கட்சிகள் கசப்பான மனநிலையில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கோடையில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில், அதிமுக சார்பில் சென்னை திரு.வி.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் எனது...