Google search engine
மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள கூட்டு நடவடிக்கை குழு​வின் முதல் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் கடந்த 22-ம் தேதி நடந்​தது. இதில், கேரளா, தெலங்​கா​னா, பஞ்​சாப் முதல்​வர்​கள், கர்​நாடகா துணை முதல்​வர் உட்பட மொத்​தம் 6 மாநிலங்​களில் இருந்து 14 அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்கேற்​றனர். இந்த கூட்​டத்​தில் ஆந்​திர மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாணின் ஜனசேனா கட்​சி​யும் கலந்து கொண்​ட​தாக கூறப்​பட்ட...
அறிவியல் கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்கங்களுடன் பிரம்மாண்டமான சென்னை அறிவியல் விழா இன்று (25-ம் தேதி) தொடங்குகிறது. இதில் அறிவியல் கருத்துகளை விவரிக்கும் வகையில் பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசின் அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உயர்கல்வித் துறையின் ஓர் அங்கமாக இயங்கிவரும் அறிவியல் நகரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு...
ஜாமீன் கிடைத்த பிறகும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவி்ல்லை என கூறி கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல் என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணை குழுவும், சிறைத்துறை நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகள் தங்களுக்கு ஜாமீன் கிடைத்தும், நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறைகளிலேயே அடைத்து...
முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், 15 மாவட்டங்களில் 21 இடங்களில் ரூ.375 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்...
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு...
சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரண்டு கட்டங்களாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர்...
நியாயமான தொகுதி மறுவரையறை கிடைப்பதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வரும் 2026-ம் ஆண்டில் நடத்தப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தமிழகத்தின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ...
உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான இவர், நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக்...
அதிமுக மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இயக்கம். இன்றுவரை சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை, என பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய 400-க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழக...
தமிழக சட்டப்பேரவை 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இன்றுமுதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. தமிழக அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி...