வளசரவாக்கத்தில் 2 மாடி பங்களா வீட்டில் தீ விபத்து: வழக்கறிஞர், மனைவி தீயில் சிக்கி உயிரிழப்பு
admin - 0
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் நடந்த தீ விபத்தில் குற்றவியல் வழக்கறிஞரும், அவரது மனைவியும் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்தின் போது, முதல் தளத்தில் இருந்து குதித்து அவரது பேரனும், வீட்டு பணிப்பெண்ணும் உயிர் தப்பினர்.
சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் 4-வது தெருவில் 2 தளம் கொண்ட சொகுசு பங்களா வீடு உள்ளது. இந்த பங்களா வீட்டில் குற்றவியல் வழக்கறிஞரான நடராஜன்(78), அவரது மனைவி தங்கம்(73), மகன்...
சென்னை மாதவரத்தில் உள்ள ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பில், 80 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் நேற்று இலவசமாக வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கும் சக்கர நாற்காலிகள் (வீல் சேர்), குழந்தைகளுக்கான நடைபயிற்சி கருவிகள், வாக்கர்ஸ், டயாபர்ஸ், ஊன்றுகோல் உள்ளிட்டவற்றை ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வி.ஆர்.வம்சி வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமூகத்தில் வறுமைக் கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்கள், சாலைகளில் வசிக்கும்...
மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழக சார்பு அணிகள் கூட்டத்தில் தீர்மானம்
admin - 0
மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக சார்பு அணி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நீட், தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா என தொடர்ந்து சமூகநீதியை அழிக்கும் மத்திய பாஜக அரசின்...
திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சுமார் 6 கி.மீ தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், புத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று திருச்சி வந்தார். பின்னர், துவாக்குடி அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர், டிவிஎஸ்...
கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி: சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
admin - 0
கல்வி நிறுவனம், குழுமங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம்,...
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொன்னதுபோல கல்லூரிக் கனவு - உயர்வுக்குப் படி - சிகரம் தொடு - நான் முதல்வன் என நமது அரசின்...
தமிழகத்தில் இன்றுமுதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே 9) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது...
பாமக சார்பில் மே 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி
admin - 0
பாமக சார்பில் 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா திருவிடந்தை நித்தியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பி்ல் மே 11-ம் தேதி சித்திரை...
தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த இரணியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாட்டில் பொருளாதார...
சென்னை விமான நிலையம், கார்கோ, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக, டெல்லி சுங்கத்துறை ஆணையராக இருந்த தமிழ் வளவன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சென்னை சுங்கத்துறையில் கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள்...










