பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக 2 பேர் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள கும்பர்பேட்டையை சேர்ந்தவர் முனீர் கான் குரேஷி (36). கோழி இறைச்சி கடை நடத்தி வரும் இவர் சில தினங்களுக்கு முன்பு தனது யூ டியூப் பக்கத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ''பஹல்காம் தாக்குதலானது மத்தியில் ஆளும்...
வாழ்வை அழகாய், அர்த்தமாய் மாற்றும் தாய்மார்களை போற்றுவோம்: அன்னையர் தினத்துக்கு தலைவர்கள் வாழ்த்து
admin - 0
அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்வை அழகாய், அர்த்தமாய் மாற்றும் தாய்மார்களை போற்றுவோம் என வாழ்த்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை வடிவமைத்து வலிமை, இரக்கம் மற்றும் குணங்களைச் செதுக்கும் அமைதிச் சிற்பிகளான அனைத்து தாய்மார்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் தன்னலமற்ற அன்பின் மூலம் தலைமுறைகளை வரையறுத்து, வாழ்வின் திருப்புமுனைகளில்...
தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு ரஜினி பாராட்டு: பிரதமருக்கு ஜி.கே.வாசன் நன்றி
admin - 0
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட இந்திய அரசுக்கு பாராட்டுகள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல் சம்பவம், போர்நிறுத்தம் ஒப்பந்தத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது....
தமிழகம் 897 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் ஏற்றுமதி, உயர்கல்வி மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முதலிடத்தில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களை பாதுகாத்த மகத்தான பணிகள் பாராட்டப்பட்டன.
முதல்வரின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாக தொடங்கப்பட, நம் நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு...
மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 100 மினி பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து இயக்கத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியது.
தற்போது 146 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 22 பேருந்துகள் மெட்ரோ ரயில் பயணிகளின் சேவைக்காகவே பிரத்யேகமாக இயங்குகின்றன. இந்நிலையில் பேருந்து சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் மேலும் 100 மினி பேருந்துகள் கொள்முதலுக்கான...
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நேற்று டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் நேற்று அதிகாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர்.
விபத்தின்போது என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் அங்கு பணியில்...
செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
admin - 0
உலக செவிலியர் தினம் திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படும் நிலையில், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் மே 12-ம் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. செவிலியர்கள் மருத்துவமனைகளில் இன்றியமையாத ஊழியர்களாக நோயாளிகளையும், வீடுகளில், ஆதரவற்ற விடுதிகளில் குழந்தைகளையும், முதியோரையும் அன்பாக, ஆதரவாக,...
சென்னை விமான நிலையத்தில் பயணியின் சூட்கேஸ் கைப்பிடியில் பாம்பு சுற்றி கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்தவர் சதீஷ் (35) என்பவர் சவூதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கோடை விடுமுறைக்காக கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் சென்னைக்கு நேற்று வந்தார். குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்துவிட்டு, தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். விமான நிலையத்தின் வெளிப்பகுதியில், பிக்கப் பாயிண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு உடமைகளை டிராலியில்...
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே பிளிச்சி கிராமம் ஒன்னிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது எல்லை கருப்பராயன் கோயில். இக்கோயில் வளாகத்தில் 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில், 18 சித்தர்களையும் செதுக்கிய சித்தக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இக்கோயிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். மேலும், திரைப்பட நடிகை மீனா, நடன இயக்குநர் கலா உட்பட ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக,...
பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையோன போர் நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளது புரியாத புதிராக இருக்கிறது. அதேநேரம், போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியுடன்...










