Google search engine
`ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் `ஆபரேஷன் சிந்தூர்' என்னும் பெயரில் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள்...
சென்னையில் 2-வது நாளாக போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் விமான நிலையம், மணலி மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி...
பொய் வழக்கு பதிந்து போலீஸார் தன்னை தாக்கியதாக வழக்கறிஞர் அளித்த புகார் மனு தொடர்பாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பெசன்ட் நகரில் மனித உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து கடந்த டிச. 10-ம் தேதி கண்கவர் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அனுமதியளிப்பதாக வாக்குறுதி அளித்த...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும்...
திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே ஆண்டு மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திமுக அரசின் 5-வது ஆண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி, நேற்று...
தமிழகத்தில் மின்னுற்பத்தி நிறுவு திறன் 3,267 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து வருவதால், அதைப் பூர்த்தி தமிழக மின்வாரியம் தனது மின்னுற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனல், நீர், சூரியசக்தி, எரிவாயு மற்றும் காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்னுற்பத்தி நிறுவு திறனை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது அனல்மின் உற்பத்தி நிறுவு திறன் 1,959 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில்...
சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் எம்.பி. சரத்குமார் ஆகியோர் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நயினார் நாகேந்திரன்: இந்தியாவில் ஓராண்டுக்கு சராசரியாக 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில் சாலை விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் காயமடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை...
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.92 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி, முக்கியமானது. மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். அதன்படி மாணவிகள்: 96.70 %, மாணவர்கள்: 93.16 % தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதில் பாடவாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. கணினி அறிவியலில் அதிகமானோரும், விலங்கியலில் குறைவானோரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ்: 135இயற்பியல்: 1,125வேதியியல்: 3,181உயிரியல்: 827கணிதம்: 3.022தாவரவியல்: 269விலங்கியல்: 36கணினி அறிவியல்: 9,536வணிகவியல் 1,624கணக்குப் பதிவியல்: 1,240பொருளியல்: 556கணினிப் பயன்பாடு:...