Google search engine
மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த விழாவை பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டியது அவசியம்....
தமிழகம் வந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் குண்டு துளைக்காத வாகனம் திடீரென பழுதடைந்தது ஏன் என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய இசட் பிளஸ் (z+) பாதுகாப்பு பிரிவு உடையவர். அவர் 2-ம் தேதி சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக...
‘இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் இரு நாடுகளும் அழிந்துவிடும்’ என ஆதங்கத்துடன் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவின் 32-வது ஆண்டு தொடக்க விழா, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, வளாகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து வைகோ மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்...
‘எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பாஜகவுடன் எந்த சூழலிலும் கைகோர்க்க மாட்டோம்’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக வணிகர் அணியின் சார்பில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா, சென்னை கோயம்பேட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் எந்தச் சூழலிலும் விசிக சமரசம் செய்துகொள்ளாது. எத்தனை நெருக்கடிகள் தந்தாலும் அந்த நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றல் விசிகவுக்கு உண்டு....
சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையைத் தொடர்ந்து, வரும் 18, 19-ம் தேதிகளில் நிலக்கல் முதல் சந்நிதானம் வரை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு ரப்பட உள்ளது. மேலும், அந்நாட்களில் பக்தர்களின் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்தில் நடைதிறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும். இதன்படி, இடவம் மாதத்துக்காக (வைகாசி) வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட...
‘திமுகவை வீழ்த்த முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் எதிர்க்கட்சியினர் தவிக்கின்றனர். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிசெய்ய கடும் உழைப்பு தேவை’ என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-வது ஆண்டில் அடியெடுத்து...
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் விற்பனை பிரசாதத்தில் உயிரிழந்த குட்டி பாம்பு இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ள மலை மீது மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் பிரசாதம் விற்பனை கடை உள்ளது. இங்கு புளியோதரை, தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக...
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு, கோவை சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் நேற்று ஆஜரானார். அவரிடம் எஸ்.பி. மற்றும் கூடுதல் எஸ்.பி. தலைமையிலான போலீஸார் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை...
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் 11, 12, ம் தேதிகளில் வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் 5,932 சிறப்பு...
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் எதிரொலி காரணமாக குடிநீர் கேன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள முறையான விதிமுறைகளை பின்பற்றுமாறு குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி...