தைவான் நாட்டு சுற்​றுலாப் பயணி உட்பட வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்​காமல் இருக்க லஞ்​சம் பெற்ற போக்கு​வரத்து போலீ​ஸார் 6 பேர் மீது காவல் ஆணை​யர் நடவடிக்கை எடுத்​துள்​ளார். தைவான் நாட்​டைச் சேர்ந்த சுற்​றுலாப் பயணி ஒரு​வர் அண்ணாநகர் பகு​தி​யில் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்​திய, போக்​கு​வரத்து காவலர் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்​காமல் இருக்க ரூ.3,500 லஞ்​சம் பெற்​றுள்​ளார். இதை அறிந்த காவல் ஆணை​யர்...
தமிழகத்​தில் தற்​போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இந்தக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​கள் 11 நிறு​வனங்​களிடம் இருந்​தும், பீர் வகைகள் 7 நிறு​வனங்​களிடம் இருந்​தும் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன. இதனிடையே கடந்த ஆட்சிக் காலங்​களில் சில குறிப்​பிட்ட நிறு​வனங்​களிடம் இருந்து மட்​டுமே அதி​கள​வில் மது​பானம் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் கூறப்​பட்​டன. இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன் அனைத்து நிறு​வனங்​களிடம் இருந்​தும் சமமான அளவில் மது​பானம் கொள்​முதல் செய்​யப்​படும்...
சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது தவெக வேட்​பாளர் தாக்​கப்​பட்ட விவ​காரத்​தில் திமுக முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு​விடம் சென்னை போலீ​ஸார் 4 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை துறை​முகம் தொகு​தி​யில் திமுக சார்​பில் முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு​வும், தவெக சார்​பில் சினோரா அசோக்​கும் போட்​டி​யிட்​டனர். இதில் சேகர்​பாபு வெற்றி பெற்​றார். முன்​ன​தாக, வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற ஏப்​.23-ம் தேதி, மண்​ணடி அங்​கப்ப நாயக்​கன் தெரு​வில் இரு தரப்​பினர் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, தள்​ளு​முள்​ளாக...
முதல்வரின் ரூ.25 லட்​சம் காப்​பீட்டு திட்​டம் விரை​வில் அமல்​படுத்​தப்​படும். புதிய அட்டை தேவை​யில்​லை. பழைய அட்டை வைத்து பயன்​படுத்தி கொள்​ளலாம் என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார். சென்னை ராஜீவ்​காந்தி அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யின் 2, 3-ம் தளங்​களில் ரூ.1.50 கோடி​யில் நவீன தொழில்​நுட்ப வசதி​களு​டன் புதுப்​பிக்​கப்​பட்ட இரண்டு விரிவுரை அரங்​கு​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் திறந்து வைத்​தார். மருத்​துவ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) வா.லோக​நாயகி, ராஜீவ்​காந்தி...
திருச்சியில் காணா​மல் போன இளைஞரை முக அடை​யாள தொழில்​நுட்​பம் மூலம் போலீ​ஸார் சென்னை மெரி​னா​வில் மீட்​டுள்​ளனர். அண்ணா சதுக்​கம் காவல் நிலைய தலை​மைக் காவலர் சரவணன், முதல்​நிலைக் காவலர் நாகேந்​திரன் ஆகியோர் கடந்த 24-ம் தேதி காலை மெரினா கடற்​கரை உழைப்​பாளர் சிலை அருகே பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அந்த வழி​யாக சென்ற இளைஞர் ஒரு​வரை சந்​தேகத்​தின் பேரில் விசா​ரித்​தனர். போலீ​ஸாரின் கேள்விகளுக்கு அவர் சரி​யாக பதில் அளிக்​காமல் அங்​கிருந்து...
சென்னை மாநக​ராட்​சிக்​கு உட்​பட்ட பகு​தி​களில் பெரு​மளவு குப்​பைகளை உரு​வாக்​குபவர்​கள் வரும் செப். 1-ம் தேதி முதல் கட்​டா​யம் குப்​பைகளை தரம் பிரித்து வழங்க வேண்​டும் என மாநக​ராட்சி அறி​வுறுத்​தி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்சி சார்​பில் பொது​மக்​களிடையே குப்​பைகளை தரம் பிரித்து வழங்​கும் பழக்​கத்தை உரு​வாக்​கும் நோக்​கில் ‘குப்​பையை பிரிப்​போம் நாளையை காப்​போம்’ என்ற 40 நாள் வீடு​களுக்​கான சிறப்பு விழிப்​புணர்வு நிகழ்ச்சி திட்​டம் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடை​பெற்று...
தமிழகத்​தில் பால் கொள்​முதல் விலையை லிட்​டருக்கு ரூ.50 உயர்த்தி வழங்க வேண்​டும் என, விவ​சா​யிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். ஆனால் தமிழக அரசு ஊக்​கத்​தொகை ஒரு ரூபாய் உயர்த்தி அறி​வித்​ததை விவ​சா​யிகள் ஏற்​க​வில்​லை. இந்​நிலை​யில், பொள்​ளாச்சி அருகே உள்ள மாப்​பிள்ளை கவுண்​டன் புதூர் கொள்​முதல் நிலை​யத்​துக்கு வந்த விவ​சா​யிகள் பாலை கொள்​முதல் நிலை​யத்​துக்கு வழங்​காமல், வீதி​யில் கொட்டி போராட்​டம் நடத்​தினர். இதுகுறித்து விவ​சா​யிகள் கூறும்​போது, “கேரளாவில் லிட்​டருக்கு...
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவை, பயணிகள் வசதி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில்...
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் கல்வித் துறை சம்பந்தமாக நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும் போது, சம்பந்தமே இல்லாமல், ‘இதற்கு நானே சாட்சி’ என்று கூறுகிறார். அவர் நின்று பேசிய இடம் சட்டப்பேரவை. அங்கு யார் நின்று என்ன வார்த்தை பேசினாலும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். எனவே, ஆதாரமில்லாமல் கூறுவது மிகப்பெரிய தவறு. குறிப்பாக, 2 மாதங்களுக்கு முன்பு...
 ‘​மாற்றம் என்று சொல்லி வந்​தவர்​களால் எந்​த​வித​மான மாற்​ற​மும் ஏற்​பட​வில்​லை’ என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விமர்​சித்​துள்​ளார். தேமு​திக நிறு​வனத்​தலை​வர் விஜய​காந்​தின் 74-வது பிறந்​த​நாளை முன்​னிட்​டு, சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், ராமாபுரம் எம்​ஜிஆர் காது கேளாதோர் பள்ளி மாணவர்​களுக்கு ரூ.50 ஆயிரத்​துக்​கான காசோலை​யை​யும், டெல்லி தமிழ் சங்​கத்​துக்கு ஏழை மாணவர்​களுக்கு கல்வி உதவிக்​காக ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை​யை​யும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய்​காந்த்...