முதல்வர் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: மேட்டூர் அணையில் நீர்வளத்துறை செயலாளர் ஆய்வு
admin - 0
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, அணையில் நீர்வளத்துறை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் விஜய் நாளை மறுநாள் (1-ம் தேதி) தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார். இதனிடையே, அணை திறப்புக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக நடந்து வருகிறது....
நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த 21 பேர் நேற்று சென்னை வந்தடைந்தனர். முன்னதாக டெல்லியில் அவர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் ஏரி உடைப்பால் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஆக.26-ம் தேதி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் சிக்கியுள்ள இந்தியர்களை அந்நாட்டு அதிகாரிகள் மூலம்...
“அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்திடுக” – அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்
admin - 0
“அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் சாமானிய ஏழை மற்றும்...
தமிழகத்தில் இருந்து சென்ற 36 பேரின் நிலை என்ன? – நேபாள மருத்துவமனைகளில் உறவினர்கள் கண்ணீருடன் தேடல்
admin - 0
காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில், தமிழகத்தில் இருந்து சென்று வெள்ளத்தில் சிக்கி மாயமான 36 பேரின் புகைப்படம், அடையாளம், ஆவணங்களை கொண்டு தேடும் பணி 4வது நாளாக தொடர்கிறது. ஆனால், அவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் ஏரி உடைப்பால் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஆக.26-ம் தேதி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது....
‘புதுவையில் கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்வு: இனி சிகப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.350; மஞ்சளுக்கு ரூ.200 வழங்கப்படும்’
admin - 0
புதுச்சேரியில் கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்படுகிறது. அதோடு, இனி சிகப்பு ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.350, மஞ்சள் ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.200-ம் தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்த பின்பு இறுதியாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்து இன்று பேசியதாவது: மத்திய அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிரதமர் உதவியோடு பல திட்டங்கள் செயல்படுத்துகிறோம். இருப்பினும் புதுவைக்கு கூடுதல் நிதி...
“தமிழர்களின் வீரக்கலையான ஜல்லிக்கட்டு ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்திய சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா தனது கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று...
முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி விரைந்தனர்
admin - 0
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்ஜூனா உட்பட 4 அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர். மேலும் கும்பகோணத்தில் இருந்து சென்ற 36 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாள வெள்ளத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ நிறுவனம் மூலம் கடந்த 23-ம் தேதி இரவு கைலாய...
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது எப்போது? என நிதியமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்துள்ளார்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரியில் இருந்து கடந்த 25-ம் தேதி வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுச் சென்று...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில், குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரை சென்ற 49 தமிழக யாத்ரீகர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த 14-ம் தேதி புறப்பட்ட இந்த குழுவில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேர், சென்னையைச் சேர்ந்த 6 பேர் உள்பட...
காவல், தீயணைப்புத் துறைக்கு ரூ.165 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
admin - 0
காவல், தீயணைப்புத் துறைகளுக்கு ரூ.164.64 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்கவும், தீயணைப்புத் துறையின் செயல்திறன் மேம்படவும், அத்துறைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.121.85 கோடியில்...








