நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்பி.க்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய நியாயமான உரிமைகளைக் காக்கவும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்தப்...
சந்தைகள், சுற்றுலா தலங்கள், பொருட்காட்சிகள், பொது இடங்களில் ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள், பொருட்காட்சிகளில் குழந்தைகளைக் கவரும் வகையில் விதவிதமான வண்ணங்களில் விற்கப்படும் கலர் அப்பளங்களில் தடைசெய்யப்பட்ட ரசாயன நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தனர். ஆய்வகங்களில் அவற்றை பரிசோதனை...
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 54 புதிய உயர் ரக மதுபானங்களை பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் வகுத்துள்ளது.
தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தரமான மதுவகைகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிற மாநிலங்களில் இருந்து உயர் ரக மதுபானங்களை இறக்குமதி செய்து விற்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம்...
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கவும் தயங்கமாட்டேன். யாராக இருந்தாலும், தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள், மருத்துவமனைகளில் தேவையற்ற ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது. ரீல்ஸ் வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறை வாரியாக...
திருவள்ளூர் மாவட்டம்,பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் அமோனியா வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமர்வு தாமாக முன்...
தாய்மொழியில் கல்வி, அறிவியல் கிடைத்தால் நாடு முன்னேறும்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு
admin - 0
சென்னையில் நடந்த மறைமலை அடிகள் பிறந்தநாள் விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாட்டில் மக்களுக்கு கல்வியும், அறிவியலும் அவரவர் தாய்மொழியில் கிடைத்தால் அந்த நாடு செல்வ வளர்ச்சியில் எளிதாக முன்னேறும் என தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத்துறை, தமிழ் மொழித்துறை மற்றும் தமிழ் இலக்கியத்துறை சார்பில், மறைமலை அடிகளின் 150-வது பிறந்தநாள் விழா, சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர்...
சென்னை, கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (45). கூலி தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றபோது,தெரு நாய் ஒன்று முருகனின் காலில் கடித்துள்ளது. இதில் காயம் ஏற்பட்டபோதும், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவில்லை.
இதையடுத்து, உறவினர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதன் பேரில், சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்து 14-ம் தேதி சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு...
முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்விழா நேற்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில் பல்லவன் இல்லம் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்,...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் புதன்கிழமை இரவு 3.0 ரிக்டர் நில அதிர்வு உணரப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாளம் அருகே கர்த்தக்கல் முனியப்பன் கோயில் பகுதியில் நேற்று இரவு 7.52 மணிக்கு பூமிக்கு அடியில் 10 அடி ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் மிகவும்...
751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்
admin - 0
அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கு நன்கொடை பெறும் வகையில் ‘நலம் TN’ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில், தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை வழியாக அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு அறக்கட்டளை மற்றும் சமூகப் பொறுப்பு நிதி வழங்கும் வகையில் ‘நலம் TN’ (www.tnhealthfoundation.org) என்ற புதிய...










