கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், ஸ்ரீகுன்றம் நகரத்தை சேர்ந்தவர் சனீத்(26). இவர் கேரளா முதல் நேபாளம் வரை ஓர் ஆண்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக ஒற்றை சக்கர சைக்கிள் மூலம் சென்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்தார். இதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவிலிருந்து ஒற்றை சக்கர சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். கோவை, மதுரை, தஞ்சை, புதுச்சேரி வழியாக 800 கி.மீ.பயணித்து நேற்று...
தமிழகத்​தில் உள்ள 52 முக்​கியக் கோயில்​களில் செல்​போன் தடை நேற்று முதல் அமலுக்கு வந்​தது. கேமரா வசதி இல்​லாத சாதாரண செல்​போன்​களுக்கு இந்​தத் தடையி​லிருந்து விலக்கு அளிக்​கப்​படு​வ​தாக அமைச்​சர் விளக்​கம் அளித்​துள்​ளார். தமிழக இந்து சமய அறநிலை​யத் துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களின் புனிதத்​தன்​மை​யைப் பாது​காக்​க​வும், பக்​தர்​கள் எவ்​வித இடையூறுமின்றி தரிசனம் செய்​வதை உறுதி செய்​ய​வும் கோயில் வளாகத்​துக்​குள் செல்​போன் கொண்டு செல்ல ஏற்​கெனவே தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. எனினும், பலர்...
மேட்​டூர் அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைத்த தமிழக முதல்​வர் விஜய், சின்​னக்​காவூர் பகு​தி​யில் விவ​சாயி ஒரு​வரின் வீட்​டுக்​குச் சென்று குடும்​பத்​தினரைச் சந்​தித்​து, விவ​சாயப் பணி​கள் குறித்து கேட்​டறிந்​தார். மேட்​டூர் அணை​யில் நிகழ்ச்​சியை முடித்த முதல்​வர், ஆய்வு மாளி​கை​யில் சிறிது நேரம் ஓய்​வெடுத்​து​விட்டு புறப்​பட்​டார். அப்​போது மேட்​டூர் அனல் மின் நிலை​யம் அருகே உள்ள சின்​னக்​காவூர் கிராமத்​தில் வசிக்​கும் விவ​சாயி ராம​சாமி​யின் வீட்​டுக்​குச் சென்​றார். ராம​சாமி​யின் குடும்​பத்​தினர்...
நீட் தேர்​வுக்கு போராடிய அனி​தா​வின் நினை​வேந்​தல் நிகழ்ச்​சிக்கு அனு​மதி வழங்​காதது ஏன் என்று சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கேள்​வியெழுப்​பி​னார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்​விநேரம் முடிந்​த​ பின்​னர் அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, பேசும்​போது, ‘‘அரியலூரைச் சேர்ந்த மாணவி அனி​தா, பிளஸ் 2 பொதுத்​தேர்​வில் மருத்​து​வக் கல்விக்​கான கட்​ஆப் மதிப்​பெண் 196.75 பெற்​றும், நீட் தேர்வு முறை பாதிப்​பால் அவருடைய மருத்​து​வக் கனவு தகர்ந்​தது. நீட் தேர்​வுக்கு எதி​ராக...
தமிழகத்​தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்​கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​தது. தமிழகத்​தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்​சாலைகள், அண்டை மாநிலங்​களு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் வழி​யாக, தினசரி ஆயிரக்​கணக்​கான சரக்கு வாக​னங்​கள், அரசு, ஆம்னி பேருந்​துகள், பயணி​கள் வாக​னங்​கள் உள்​ளிட்​டவை பயணித்து வரு​கின்​றன. இச்​சாலைகளை பயன்​படுத்​தும் வாக​னங்​களிடம் கட்​ட​ணம் வசூலிக்க, தமிழகத்​தில் 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் உள்​ளன. தேசிய நெடுஞ்​சாலைகள் கட்டண விதி​களின் படி, ஒவ்​வொரு ஆண்​டும் ஏப்​ரல்...
சென்​னை​யில் 11 இடங்​களில் நவீன குளிரூட்​டப்​பட்ட பேருந்து நிறுத்​தங்​கள் அமைப்​ப​தற்​காக மாநக​ராட்சி - பெருநிறு​வனங்​கள் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. சென்னை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட பகு​தி​களில் உள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​தும் பணி​களின் ஒரு பகு​தி​யாக, பொது ​மக்​கள் மற்​றும் பயணி​களின் வசதிக்​காக பாது​காப்​புடன் கூடிய அதிநவீன குளிரூட்​டப்​பட்ட (ஏசி) பேருந்து நிறுத்​தங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. முதல்​கட்​ட​மாக பெருநிறு​வனங்​களின் சமூகப் பங்​களிப்பு (சிஎஸ்​ஆர்) நிதி​யின் கீழ் நகரின் 11 முக்​கிய இடங்​களில் இந்த நவீனப்...
தமிழக காவல் துறை​யில் புதி​தாக பணி​யில் சேர்ந்த 14 ஐபிஎஸ் அதி​காரி​களுக்கு தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் பணி​யிடம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: ஐபிஎஸ் அதி​காரி​யான அன்​ஜித் ஏ நாயர் தூத்​துக்​குடி உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், பி.அங்​கிதா பட்​டுக்​கோட்டை உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், எஸ்​.அஸ்​வினி திருச்​செங்​கோடு உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், பிஸ்​வஜித் பாண்டா திருநெல்​வேலி ஊரக உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதே​போல், சத்​ரியா...
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. கடந்த மாதம் (ஆகஸ்ட்) சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு - 2026’ நடைபெற்றது....
அ​தி​முக மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனை கூட்​டம் செப்​.6-ம் தேதி சென்​னை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் செயற்​குழு மற்​றும் பொதுக்​குழுவை நடத்​து​வது தொடர்​பாக ஆலோ​சிக்க இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு, அதி​முக​வில் பல்​வேறு பிரச்​சினை​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. ஏற்​கெனவே 6 எம்​எல்​ஏக்​கள் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​து​விட்​டனர். சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் நத்​தம் விஸ்​வ​நாதன், எஸ்​.பி.வேலுமணி, கே.பி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் தனி...
 தமிழகத்​தில் பால் கொள்​முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்​தி, இனி ரூ.44 ஆக வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்ளார். சட்​டப்​பேர​வை​யில் 110 விதி​யின்​கீழ் முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் பால் உற்​பத்தி கிராமப் பொருளா​தார மேம்​பாட்​டில் ஒரு முக்​கியப் பங்கு வகிக்​கிறது. இதைக் கருத்​தில்​கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு சங்​கங்​களில் பால் வழங்​கும் 3.16 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பால் உற்​பத்​தி​யாளர்​கள்...