Google search engine
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் வெற்றிபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டேகட்சி மத்திய அமைச்சரவையில்இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஷிண்டே கட்சியைச் சேர்ந்த எம்.பி. நரேஷ் மாஸ்கே நேற்று முன்தினம் கூறும்போது, “உத்தவ் அணியைச் சேர்ந்த2 எம்.பி.க்கள் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேசினர். அப்போது, இண்டியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருதியதாகவும் அது...
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் டெல்லி அமைச்சர் அதிஷி மற்றும் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனியும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டனர். ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு நேற்றைய (ஜூன் 9) தினம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் அதிஷி. அதில் யமுனை ஆற்றில் இருந்து முனாக் கால்வாய் வழியாக 1,050 கனஅடி நீரை திறந்து...
மோடி 3.0 அமைச்சரவையின் முதல் கேபினெட் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) மாலை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய நிதி...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 12 ரன்களில் வென்றது கனடா. இது ஐசிசி டி20 உலகக் கோப்பை அரங்கில் கனடாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்துள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த கனடா அணி,...
மத்தியில் அடுத்த அரசை அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன்பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார். மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ள போதிலும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 293 இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் என்டிஏ நாடாளுமன்ற கட்சி தலைவராக பிரதமர் மோடி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, மூன்றாவது முறையாக ஆட்சி...
பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு அண்மையில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் கங்கனா ரனாவத். இவர் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த பெண் காவலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக...
‘‘என்னால் போக்குவரத்தில் எவ்வித இடையூறும் இருக்க கூடாது. குறிப்பாக மக்கள் பாதிக்கப்பட கூடாது’’ என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். டெல்லிக்கு செல்லும் முன் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்னால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடாது. நான் செல்லும் போதும், வரும்போதும், சாலைகளின் இருபுறமும் மக்களை...
மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8%ஆகவும் இருந்தது. இது 2024-ல்9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 8,337 வேட்பாளர்களில் 797 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி மட்டுமே பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தது. இதன் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவார். மற்ற அனைத்து கட்சிகளிலும் இதற்கு அடுத்த நிலையில் 33 சதவீதம் மற்றும் அதற்கு...
பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை பாஜக கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளுடன் தற்போது என்டிஏ.வின் பலம் 292 ஆக உள்ளது. இதில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரை கேரளாவின் மலப்புரம் தொகுதியில் மட்டும்பாஜக களமிறக்கியது. பாஜகசார்பாக மலப்புரத்தில் போட்டியிட்ட அப்துல்...
மக்களவை தேர்தலின் மூலம் முதல்முறையாக 280 எம்பிக்கள் மக்களவையை அலங்கரிக்க உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 267 எம்பிக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது அதுவே அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களாக கருதப்பட்டது. தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 263 வேட்பாளர்களும் ஏற்கெனவே மக்களவையில் எம்பி பதவி வகித்தவர்களே. கூடுதலாக, 16 பேர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்படவிருக்கிறார்கள். மற்றுமொரு எம்பி ஏற்கெனவே மக்களவையில் ஏழு முறை பதவி...