Google search engine
மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகள் பெற்ற காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு இந்தஅந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்தது. கடந்த 2004 முதல் 20 வருடஅரசியல் வாழ்வில் ராகுலுக்குமுதன்முறையாக அரசியல் சாசனப்பதவி கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க உள்ளன. எதிர்க்கட்சி தலைவருக்கு டெல்லியில் டைப்-8 குடியிருப்பு கிடைக்கும். இதன் பரப்பளவு 8,250சதுர அடி ஆகும். தனி...
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடலாமா என்று தீவிரமாக ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில்இக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு...
பிரயாக்ராஜில் 2025-ம் ஆண்டில் மகா கும்பமேளா நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 2025-ம் ஆண்டில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தலைநகர் லக்னோவில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது...
கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம்தேதி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவசரநிலைபிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. அவசரநிலையின் கதை ஜூன் 25, 1975 அன்று தொடங்கவில்லை. அதற்கு முன்னதாகவே, 1974-ம் ஆண்டு குஜராத்தில் ‘நவநிர்மான் அந்தோலன்’ என்ற பெயரில் காங்கிரஸ் அரசின்...
மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தராததால் மக்களவை தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி உள்ளது. முதன்முறையாக மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தல் 1952-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றதாக வரலாற்று பதிவுகள் உள்ளன. இதில் தேர்வான கணேஷ் வாசுதேவ் மாவ்லேங்கர், நாட்டின் முதல் மக்களவை தலைவராகக் கருதப்படுகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற வரலாற்றில், மக்களவை தலைவருக்கான தேர்தல் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இன்று (ஜூன் 26) வாக்குப் பதிவுமுறையில் இந்தத் தேர்தல்...
ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே மேலும் சில தடுப்பணைகள் கட்டப்படும் என நேற்றுமுதல்வர் சந்திரபாபு தனது தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தனது குப்பம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குப்பம் வந்தடைந்தார் சந்திரபாபு நாயுடு. அங்கு அவர் பேசுகையில், “என்னை9-வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பியதற்கு ஒவ்வொருக்கும்...
நாடாளுமன்றத்தில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் இரு நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர். இந்த சூழலில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நேற்று சமூக வலைதளத்தில் புகைப்பட பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த 2019-ம் ஆண்டில் எம்பிக்களாக பதவி வகித்த கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலேவின் புகைப்படத்தையும், தற்போதைய மக்களவையில் அவர்கள் மீண்டும் ஒன்றுகூடிய...
நீட் மற்றும் நெட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்த வழக்குகளை சிபிஐ நான்கு கட்டங்களாக விசாரிக்க உள்ளது. மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்கு பிஹாருக்கும் குஜராத்தின் கோத்ராவுக்கும் குழுக்களை அனுப்பியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வழக்கத்துக்கு மாறாக 67 மாணவர்கள் முதலிடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிஹாரில் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாளை கசியத் செய்ததாக மாணவர்கள் உள்ளிட்ட சிலரை போலீஸார்...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் நாட்டில் 10 பிரச்சினைகள் நடந்துள்ளன. 1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை, 4. நீட் மருத்துவத் தேர்வு ஊழல், 5. நீட் முதுகலை தேர்வு ரத்து,...
வேலை இல்லாத பல இளை ஞர்கள் தங்களது வங்கிக் கணக் குகளை இணைய மோசடி பேர் வழிகளுக்கு வாடகைக்கு கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவது கோவா போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவல்கள் குறித்து கோவா போலீஸார் பகிர்ந்து கொண்டதாவது: சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை குறிவைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி இணைய மோசடிக் கும்பல் அவர்களை ஏமாற்றி...