Google search engine
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பதவியேற்ற பிறகு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அப்போது, “கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள், விஐபி பிரேக்தரிசன டிக்கெட்டுகள், ஒப்பந்தபணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் வந்தன. இதன் பேரில் திருப்பதி மற்றும் திருமலையில்...
‘ஜெய் சம்பவிதான்’ என கோஷமிட்டது பற்றி சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் ஹூடாவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் கண்டனம் தெரிவித்தார். மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி.க்களில் சசிதரூர் எம்.பி.யாக பதவியேற்றார். உறுதிமொழியை வாசித்து முடித்ததும் அவர் ஜெய் ஹிந்த், ஜெய்சம்விதான் (அரசியல் சாசனம் வாழ்க) என கோஷமிட்டார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிஎம்.பி.க்களில் சிலர் அவையில் ‘ஜெய் சம்விதான்’ என கோஷமிட்டனர்....
அரசு எந்த முடிவு எடுத்தாலும், 3 அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். நோக்கம், பயனாளர், செயல்திறன். மத்திய அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு, கட்டாயம் ஆகிறது. காலை 9:15-க்குள் வரத் தவறினால், அரை நாள் தற்செயல் விடுப்பாகக் கொள்ளப்படும் முன்னர் குறிப்பிட்டதில் 2 அம்சங்கள் - நோக்கம், பயனாளர் - தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதனை முறையாக முழுமையாகச் செயல்படுத்த சாத்தியக் கூறுகள்..? பயோமெட்ரிக் வருகைப் பதிவு...
உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களை லண்டனை சேர்ந்த ‘டைம்ஸ் மேல் படிப்பு தரவரிசை நிறுவனம்’ பட்டியலிடுகிறது. இந்த நிறுவனத்தின் சர்வதேசவிவகாரப் பிரிவு தலைமை அதிகாரி பில் பாட்டி விடுத்துள்ள செய்தியில், “டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசை பட்டியலில் இடம் பெறும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நரேந்திர மோடி மேற்கொள்ளும் உலகளாவிய சீர்திருத்தமே காரணம். கடந்த 2017-ம் ஆண்டில், டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் 42...
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, அவசரநிலை பற்றி அறிக்கை வெளியிட்டதற்காக அதிருப்தி தெரிவித்தார். மக்களவைத் தலைவராக 2-வதுமுறையாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட ஓம் பிர்லா, அவசரநிலை பிரகடனத்தின் 50-வது ஆண்டை முன்னிட்டு மக்களவையில் ஒரு அறிக்கையை வெளியிட்டாார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தியது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என பிர்லா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது அமைச்சரவை சகாக்களை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅமைச்சரவை கடந்த 9-ம் தேதிபதவியேற்றது. பிரதமரை தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். 18-வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் மக்களவை தலைவர் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களை மக்களவையில் அறிமுகம்...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிபிஐ நேற்றுமுன்தினம் கைது செய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அர்விந்த் கேஜ்ரிவாலை திட்டமிட்டே சிபிஐ கைது செய்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், “வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கையில் சிபிஐயின் கைதை சட்டவிரோதம் என்று கூற முடியாது” என்று தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், கேஜ்ரிவாலை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐவுக்கு அனுமதி வழங்கியது. கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால்...
“ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன.” என்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா...
மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க...
பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூன் 26) பின்னிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகத் தெரிகிறது. முன்னாள் துணை பிரதமரான அத்வானிக்கு 96 வயதாகிறது. அவருக்கு சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள்...