ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து தெனாலி வரை அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து சக பெண் பயணிகளுடன் பயணம் செய்தார். ஒய்.எஸ். ஷர்மிளாஅப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்று 5 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை அமல்படுத்தவில்லை. அவர் அளித்த சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதி என்னவானது? அவர்...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மத்திய பிரதேசம் போபால் நகரின் மிஸ்ரோத் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டவர் ஃபைசல் என்கிற ஃபைசான். இதுதவிர இவர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 14 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட நபர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி டி.கே.பாலிவால் கூறியதாவது:...
 “இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிற நிலையில், கார்பனை மையப் படுத்திய தயாரிப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது” என்று சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான மூடீஸ் தெரிவித்துள்ளது. இந்தியா 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பகுதியாக 2030-க்குள் குறிப்பிட்ட அளவில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை...
அமராவதி: அரசியலில் தனக்கு எம்ஜிஆர்தான் ரோல் மாடல் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிமுகவின் 53-வதுஆண்டு விழாவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேற்று சமூக வலைதளம் மூலம்அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில் அவர், “எம்ஜி. ராமசந்திரன் எனும் எம்ஜிஆர் அதிமுக எனும் கட்சியை நிறுவி,தமிழக அரசியலில்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜயநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், காக்கதீயர்கள், சாளுக்கியர்கள், சுல்தான்கள்,ஆற்காடு நவாபுகள், மஹந்துக்கள்என பலர் ஆட்சியிலும் எவ்வித சிதிலமும் அடையாமல் பாதுகாக்கப்பட்டது. இதில், ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி கோட்டையிலும் வாசம்செய்துள்ளார். அவர் விஜயநகரத்தில் இருந்து சந்திரகிரிக்கு வரும் போதெல்லாம், திருமலைக்கு தனது பட்டத்து ராணிகளான திருமல தேவி மற்றும் சின்னமாதேவி ஆகியோருடன் திருமலைக்கு...
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில்மேல்சாந்தியாக (தலைமை அர்ச்சகர்) அருண் குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1-ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெறும். இதற்கு முன்னதாக, ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரம் மஞ்சமாதா கோயிலுக்கு மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவது வழக்கம். மேல்சாந்தி பணிக்கு ஏராளமானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பலகட்ட தேர்வுக்கு பிறகு அதில் இருந்து ஐயப்பன் சன்னதிக்கு 24 பேரும்,...
பாட்னா: பிஹாரில் கள்ளச் சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 25 ஆக உயர்ந்தது. இதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார். பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும், அடிக்கடி கள்ளச்சாராயம் குடித்துஉயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. இந்நிலையில் சிவான் மாவட்டம், பகவான்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மதர் கிராமத்தை சேர்ந்த பலர் கடந்த செவ்வாய்க்கிழமை...
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன. இந்த சூழலில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி ஜாகுர் அகமது...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் கேரள காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ராகுல் மம்கூடதில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.சரின் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் சரின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள மாநில காங்கிரஸ் பிரிவு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உட்பட 3...
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பெண்பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம்13-வது நாளை எட்டியது. உயிரிழந்த மருத்துவருக்கு நீதிகிடைக்க வேண்டும், மாநில சுகாதார செயலாளரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில்...