Google search engine
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (வயது 62). இந்நிலையில் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று அவர் தனதுராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில் அவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீதிபதி பதவியை நான் இன்று ராஜினாமா செய்துவிட்டேன். வரும் 7-ம் தேதி...
நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதித்து காட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். தெலங்கானா மாநிலம், சங்காரெட்டியில் பாஜக சார்பில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: காங்கிரஸார் செய்த ஊழல்கள், முறைகேடுகளை நான் பகிரங்கமாக கூறுவதால் அக்கட்சியினர் என் மீது...
மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மினி லாரி கவிழ்ந்து ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டம் அம்ஹாய் தேவ்ரி கிராமத்தை சேர்ந்த 30-க்கும்மேற்பட்டோர் ஷாபுரா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் பிறகு மினி லாரி ஒன்றில் இரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் பட்ஜார் காட் என்ற இடத்தில் உள்ள...
கடந்த 2012-16 காலகட்டத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசமுதல்வராக பதவி வகித்தார். அப்போது, சுரங்க குத்தகை சட்ட விரோதமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அலகாபாத்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டுசிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அகிலேஷ் யாதவ் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால்,...
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி மாற்று கட்சி வேட்பாளருக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதனியா கூறியதாவது:இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரே ஒரு தொகுதிக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர். மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட்...
இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நேற்று கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. சாலை உருவாக்கம், நீர்ப்பாசனக் கட்டமைப்பு, பழங்குடி மக்கள் மேம்பாடு என பல தரப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. அந்த...
உத்தரபிரதேசம் ஜோன்பூரை சேர்ந்தவர் அபிஷேக் சிங். 2011-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் சொந்த மாநில கேடரில் பணியாற்றி வந்தார். திரைப்பட நாயகன் போன்று தனது தோற்றம் இருப்பதாக கருதும் அபிஷேக் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார். இவை வைரலாகி வந்த நிலையில், கடந்த 2015-ல்அயல்பணியாக டெல்லி மாநில அரசில் சேர்ந்து 5 வருடங்கள் பணியாற்றினார்.கடந்த 2022-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது...
ஆந்திராவில் குடும்ப அரசியல் மேலோங்கி விட்டது என மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி கூறியுள்ளார். ஆந்திராவில் வெகு விரைவில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மாநில கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவர் தற்போது ஆந்திர முதல்வராக பதவி வகித்து...
டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த சில வாரங்களாக நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கி வந்தார்எனவும், அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சை பெற்றவர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த நபரின் வயிற்றை எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது சிறுகுடலில் அதிகளவிலான நாணயங்கள் மற்றும் காந்தங்கள் அடைத்திருந்தது தெரியவந்தது....
மாநிலங்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உட்பட...