பாகிஸ்தான் சரணடைந்த புகைப்படம் உரிய இடத்தில் உள்ளது: இடம் மாற்றப்பட்டது தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம்
admin - 0
கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில், பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த வரைபடம், மானெக்ஷா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது மிகச் பொருத்தமான இடம் என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றதால் வங்கதேசம் உருவானது. இதை வெற்றி தினமாக ராணுவம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.
இந்தாண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு, 1971-ம்...
சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் நடந்தது என்ன?
admin - 0
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியான வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 68 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளரான...
மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி தோல்வி அடைந்தது. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாடு கட்சி தலைவரும் காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா இவிஎம் இயந்திரங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவி்தார். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி நேற்று கூறும்போது, “இவிஎம்மில் முறைகேடு...
இறந்துபோன தந்தையின் அரசுப் பணியை பெறுவதற்காக உடன்பிறந்த 2 சகோதரர்களை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்தவர் போலராஜு. மாநில வருவாய்த் துறையில் பணியாற்றி வந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு வழங்கப்படும் அரசுப் பணியை பெறுவதற்கு அவரது 2 மகன்கள் கோபி,...
பழம்பெரும் காளிகாம்பாள் கோயில் அமைந்த கால்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷி மீண்டும் வெல்வாரா?
admin - 0
டெல்லியின் ஆம் ஆத்மி முதல்வரான அதிஷி மர்லேனா தனது கால்காஜி தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார். இங்கு பழம்பெரும் காளிகாம்பாள் கோயில் அமைந்துள்ளது.
டெல்லியில் கடந்த 2020 சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி, கால்காஜி தொகுதியில் முதல் முறை யாக போட்டியிட்டு பாஜக வேட்பாளர் தரம்பீர் சிங்கை தோல்வியுறச் செய்தார். அப்போது அவர் 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், கால்காஜி தொகுதியில்...
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசுகிறார்.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய...
ராணிப்பேட்டையில் தைவான் குழுமம் அமைக்கும் ரூ.1,500 கோடி காலணி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
admin - 0
கட்டுமான பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளது. 2025 டிசம்பருக்குள் பணிகளை முடித்து உற்பத்தி தொடங்கும். 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தைவானை சேர்ந்த ஹாங் ஃபு குழுமம் சார்பில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளன. 2025 டிசம்பருக்குள் பணிகளை முடித்து, உற்பத்தி தொடங்க...
இலங்கையில் நெருக்கடி நிலையின்போது 5 பில்லியன் டாலர் பொருளாதார உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ள திசநாயகவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். இதையடுத்து அவர்களது சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் திசநாயக கூறியுள்ளதாவது:
இரண்டு...
எட்வினா மவுன்ட்பேட்டனுக்கு நேரு எழுதிய கடிதங்களை ஒப்படையுங்கள்: ராகுல் காந்திக்கு பிரதமரின் அருங்காட்சியகம் கடிதம்
admin - 0
எட்வினா மவுன்ட்பேட்டனுக்கு நேரு எழுதிய கடிதத்தை ஒப்படையுங்கள் என ராகுல் காந்திக்கு பிரதமரின் அருங்காட்சியகம் கடிதம் எழுதி உள்ளது.
டெல்லியில் உள்ள பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் உறுப்பினர் ரிஸ்வான் காத்ரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தோம். அதில், இந்த அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு 51 அட்டைப்...
சத்தீஸ்கர் மாநில காவல்துறையின் 25 ஆண்டுகால தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, நேற்று முன்தினம் ‘குடியரசுத் தலைவரின் காவல் வண்ண' விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. நக்சல்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தால்புருக்குச் சென்று, சரணடைந்த 30 நக்சல்கள் மற்றும் அங்கு...









