Google search engine
கந்தர்பால்: ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கந்தர்பால் மாவட்டத்தில் சோனம்மார்க் எனுமிடத்தில் ஞாயிறு மாலை இத்தாக்குதல் நடந்துள்ளது. அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பணிபுரிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. அப்பகுதியை...
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடும்சூழ்நிலை உருவானாலும் இந்தியாகூட்டணி வேட்பாளர்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார். இதுகுறி்த்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரையில் 18-20 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரேநோக்கம். அதில் உறுதியாக உள்ளோம். இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த...
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்தவர் கடற்படை கேப்டன் மிருதுல் ஷா (53). இவருடைய பெற்றோர் ஒரு வீட்டை 1966-ம் ஆண்டு விமானப்படை கேப்டன் ஹர்பால் சிங் என்பவர் ரு.100-க்கு வாடகைக்கு விட்டுள்ளனர். ஹர்பால் சிங் உயிரிழந்த பிறகு அவரது மனைவி மற்றும் மகள்(நீலம் சிங்) அங்கு தொடர்ந்து வசித்து வந்துள்ளனர். தாய் உயிரிழந்த பிறகு நீலம் சிங் வாடகைதாரராகி உள்ளார். ஆனால், அவர் தொடர்ந்து வெறும்100 ரூபாயை மட்டுமே வாடகை...
புதுடெல்லி:ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், அதை ஈடு செய்ய25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த இடங்களுக்கு, ஏற்கெனவே ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்ட நபர்களையும் மறுநியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரயில்வேயில் ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்டவர்கள், சூப்பர்வைசர் முதல் டிராக் மேன் வரையில் பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உடல் தகுதி: அவர்களின் கடைசிஐந்து ஆண்டுகால பணி நடத்தைஅலசப்பட்டு,...
பெங்களூரு: இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐஏஎப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகவும் மதிக்கப்படும், இந்த விருதை பெற்றுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. ஐஏஎப் உலக விண்வெளி விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச விண்வெளி கருத்தரங்கம் இத்தாலி நாட்டின் தலைநகரான மிலன் நகரில் அண்மையில் நடந்தது. இதில் இஸ்ரோ அமைப்பின் சார்பில் இந்தியா முன்னெடுக்கும் விண்வெளி ஆய்வு...
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு விவகாரத்தில் அவரது மைத்துனரின் வீடு, மைசூரு நகர மேம்பாட்டு கழக அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோத‌னை நடத்தினர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட,மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா மீது நில‌முறைகேடு...
அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் 18 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயினுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் தாமதம் மற்றும் நீண்ட நாட்கள் சிறைவாசம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே, "விசாரணையில் தாமதம், 18 மாதங்கள் நீண்ட சிறைவாசம்...
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று விஜயவாடா பேருந்து நிலையத்தில் இருந்து தெனாலி வரை அரசு பஸ்ஸில் டிக்கெட் எடுத்து சக பெண் பயணிகளுடன் பயணம் செய்தார். ஒய்.எஸ். ஷர்மிளாஅப்போது அவர் பேசியதாவது: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்று 5 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை அமல்படுத்தவில்லை. அவர் அளித்த சூப்பர் சிக்ஸ் தேர்தல் வாக்குறுதி என்னவானது? அவர்...
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மத்திய பிரதேசம் போபால் நகரின் மிஸ்ரோத் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டவர் ஃபைசல் என்கிற ஃபைசான். இதுதவிர இவர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 14 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட நபர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி டி.கே.பாலிவால் கூறியதாவது:...
 “இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிற நிலையில், கார்பனை மையப் படுத்திய தயாரிப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது” என்று சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான மூடீஸ் தெரிவித்துள்ளது. இந்தியா 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்யமாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் பகுதியாக 2030-க்குள் குறிப்பிட்ட அளவில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை...