இஸ்ரோவுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது: தலைவர் எஸ்.சோம்நாத் தகவல்
admin - 0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்காக (இஸ்ரோ) மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது என்று அதன் தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: இந்தியா இதுவரை 97 ராக்கெட்களை ஏவி யுள்ளது. மேலும் 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அதன் சுற்றுப்பாதைகளில் சுற்றி வரச் செய்துள்ளது.இஸ்ரோவுக்காக மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும், அதைவிட 2.54 மடங்கு...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்நேற்று 25 கிலோ தங்க நகைகள் அணிந்து வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். இரு சகோதரர்கள் மற்றும் அந்த இருவரில் ஒருவரின் மனைவி என இந்த மூவரும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இரு சகோதரர்களும் தலா 10...
பெண் மருத்துவர் கொலையாளி, முன்னாள் முதல்வர் உட்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
admin - 0
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல் துறையை சேர்ந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது சிபிஐ காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நிராகரித்த...
உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மொய்த் கானின் வணிக வளாகம் நேற்று புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
2 மாதங்களுக்கு முன்பு 12 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக அயோத்தி மாவட்டத்தில் உள்ள பதர்சா நகரில் பேக்கரி நடத்தி வந்த மொய்த் கான் மற்றும் அவரது ஊழியர் ராஜு கான் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் ஜூலை...
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கும் சூழலில் பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனை சட்டத்தைக் கடுமையாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மம்தா பானர்ஜி கடிதத்தில் கூறியதாவது: இந்தியாவில் நாளொன்றுக்கு 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் பல சமயங்களில் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்படுகொலை செய்யப்படுகிறார். இந்த போக்கு திகிலூட்டுகிறது....
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காணாமல்போன பயிற்சி விமானத்தை தேடும் பணி தொடரும் நிலையில் அதில் சென்ற பயிற்சி விமானி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் உள்ள சோனாரி விமான நிலையத்தில் இருந்து 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா-152 ரக பயிற்சி விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானியும் பயிற்சி விமானியும் இருந்தனர். இந்நிலையில் இந்த விமானம் காணாமல்போனது.இதையடுத்து விமானத்தை தேடும்...
விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண விரைவில் நிரந்தர குழு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றம் கருத்து
admin - 0
விவசாயிகளின் குறை தீர்க்க விரைவில் நிரந்தர கமிட்டி அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம்பஞ்சாப்-ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு எல்லையில் முற்றுகையிட்ட விவசாயிகளை முடக்க ஷம்பு எல்லையை ஹரியாணா அரசு மூடியது....
வக்பு மசோதா நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டம்: பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி
admin - 0
வக்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
வக்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசுமுடிவு செய்தது. மசோதாவை ஆய்வு செய்ய மக்களவை பாஜக உறுப்பினர்...
13 ஆண்டுக்கு முன் விடுதி மாடியில் இருந்து விழுந்து செயலிழந்து போன மகனை கருணைக்கொலை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு
admin - 0
பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் விடுதியின் 4-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் 13 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, முற்றிலுமாக செயலிழந்துபோனார். மகனை காப்பாற்றும் முயற்சியில் பெற்றோர்அவரை மருத்துவமனையில் அனுமதித்து இடைவிடாது சிகிச்சை அளித்து வருகின்றனர். எத்தகைய பேச்சும், அசைவுமின்றி படுத்தப்படுக்கையாக இருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு ரைல்ஸ் குழாய் மூலம் மருத்துவமனையில்...
ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், ராம்பில்லி மண்டலம், அச்சுதாபுரம் எனும் ஊரில் ஒரு தனியார் பார்மா நிறுவனம் உள்ளது. இங்கு 3 ஷிப்ட்களில் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஷிப்டிலும் சுமார் 300 முதல் 380 பேர் வரை பணி புரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம்ஷிப்டின் போது, தொழிற்சாலைக்குள் இருந்த ரியாக்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டது. சுற்றுப்புற கிராமங்களுக்கும் இந்த...










