ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்நேற்று 25 கிலோ தங்க நகைகள் அணிந்து வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். இரு சகோதரர்கள் மற்றும் அந்த இருவரில் ஒருவரின் மனைவி என இந்த மூவரும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இரு சகோதரர்களும் தலா 10 கிலோ எடையுள்ள தங்க சங்கிலிகள், மோதிரங்கள், கையில் காப்பு என மொத்தம் 20 கிலோ நகைகளை அணிந்திருந்தனர். இவர்களுடன் வந்த பெண் 5 கிலோ தங்க நகைகள் அணிந்திருந்தார்.இந்த மூவரையும் வரிசையில் இருந்த சாமானிய பக்தர்கள் மட்டுமின்றி விஐபி பக்தர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கோயிலுக்கு வெளியே வந்த இவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்த பக்தர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினர். இதையடுத்து கூலிங் கிளாஸ்அணிந்து கொண்டு பலருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட மூவரும் பிறகு காரில் ஏறிச் சென்றனர். இவர்களுடன் பாதுகாப்புக்காக சுமார் 15 பேர் வந்திருந்தனர்.