Google search engine
“அஜித் விரும்பினார், அவருக்காக செய்ததுதான் ‘விடாமுயற்சி’ படம்” என்று இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். ‘விடாமுயற்சி’ படம் குறித்து முதன்முறையாக பேட்டியொன்றை அளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. அதில், “இந்தப் படம், அசாதாரண ஹீரோவை கொண்டிருக்கும். வழக்கமான, மாஸ் ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படங்களை போல் அல்ல. நான் விரும்புவதெல்லாம், எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி , திறந்த மனதுடன் திரையரங்குக்கு வருவதுதான். ‘விடாமுயற்சி’ என்பது, உங்களையும் என்னையும் போன்ற ஒரு சாதாரண மனிதனைப்...
மும்பையை விட்டு செல்ல விரும்புவதாக அனுராக் கஷ்யப் காட்டமாக தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகில் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் அனுராக் கஷ்யப். தற்போது அவருடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்போது பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் திரையுலகம் செயல்பாட்டு முறை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் அனுராக் கஷ்யப். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “செலவு...
சிம்பு - தேசிங்கு பெரியசாமி இணையவுள்ள கதை குறித்து தயாரிப்பாளர் தாணு சிலாகித்து பேசியிருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. முதலில் இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. படத்தின் பொருட்செலவு அதிகமாக இருப்பதால், தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகிவிட்டது. இதனிடையே, தேசிங்கு பெரியசாமி படத்தின் கதை குறித்து பேட்டியொன்றில் தாணு பேசியிருக்கிறார். அதில், “தேசிங்கு பெரியசாமி...
உலகளவில் ‘டாக்சிக்’ படத்தை வெளியிட, ஹாலிவுட் நிறுவனத்துடன் அப்படக்குழு பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை டிசம்பர் மாதம் வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனிடையே, இப்படத்தை உலகளவில் வெளியிட யஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பிரபல ஹாலிவுட்...
‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிச் செய்து வருகின்றன. இதில் ‘காதலிக்க நேரமில்லை’ படமும் ஒன்று. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 2 பாடல்கள்...
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. இதில், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஜன. 10 -ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ராம் சரணுக்கு 256 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடிகர்களுக்காக வைக்கப்பட்ட கட்-அவுட்களிலேயே இது...
மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம், ‘த பேட்மேன்’. ராபர்ட் பேட்டின்சன், ஜுயி கிராவிட்ஸ், பால் டனோ, ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரித்தது. காவல்துறை மற்றும் பேட்மேனுக்கு கடும் சவாலாக இருக்கிறான், ஒரு சீரியல் கில்லர். தனது சாகசத்தோடு, துப்பறியும் திறனையும் கொண்டு குற்றவாளியை பேட்மேன் பிடிப்பதுதான் படம். இது உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றதை...
மலையாள நடிகர் திலீப் சங்கர் சடலமாக ஓட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். மலையாள திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தவர், திலீப் சங்கர். ‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அவர், அம்மா அறியாதே, சுந்தரி, பஞ்சாக்னி உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். சில நாட்களாக அவர்...
கை வைத்த தொழில்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டுபவர் முருகப்பா சென்ராயர் (தம்பி ராமையா). மனைவி இருக்கும்போதே, தனது ஊழியரான வள்ளிமலரை இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். இவரது பலவீனத்தைப் பயன்படுத்தி பணம் பார்க்கும் மற்றொரு பெண்ணான விசாகா, தனது காதல் கணவன் ஆல்பர்ட்டின் (பாடகர் கிருஷ்) குடும்ப வன்முறையிலிருந்து தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறார். முருகப்பாவின் அறிவுரைக்கு அடங்க மறுத்து பிளாக்மெயில் செய்யும் ஆல்பர்ட்டை, கொலைசெய்யும்படி தன் ஆட்களை அனுப்புகிறார். பிறகு...
போலீஸ் அதிகாரி அர்ஜுன் என்ற மேக்ஸ் (கிச்சா சுதீப்), இடைநீக்கம் முடிந்து புதிதாகப் பொறுப்பேற்க வருகிறார் புதிய ஸ்டேஷனுக்கு. வரும் வழியில் பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபடும் இரண்டு பேரை, அடித்து லாக்கப்பில் தள்ளுகிறார். அவர்கள் அமைச்சரின் மகன்கள் என்று தெரிந்ததும் மற்ற போலீஸ்காரர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயங்குகிறார்கள். இந்நிலையில் லாக்கப்பில் இருந்தவர்கள் திடீரென்று இறந்து கிடக்கிறார்கள். அவர்களின் செல்போனில் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால்...