நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து ஹீரோவாக நடித்துள்ள படம், ராஜாகிளி. அவரது மகன் உமாபதி ராமையா திரைக் கதை அமைத்து இயக்கி இருக்கிறார். 'மிக மிக அவசரம்’, ’மாநாடு’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். டிச.13-ம் தேதி...
பரத், சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஹைப்பர் லிங்க்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்து நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 17-ம் தேதி பூஜையுடன் தொடங்குவதாக இருந்தது. த்ரிஷாவின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தொடங்கவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை வரும் 27-ம் தேதி கோவையில் நடக்கிறது. 28-ம் தேதி முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள உப்பள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் லைன்மேன் சுப்பையா (சார்லி). அவர் மகன் செந்தில் (ஜெகன் பாலாஜி). எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் முடித்துள்ள அவர், சூரிய ஒளி மறைந்ததும் தெரு விளக்குத் தானாக எரிவது போலவும் ஒளி வந்ததும் அணைவது போலவும் ஒரு புராஜெக்டை உருவாக்குகிறார். இதை அரசு அங்கீகரித்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்பது அவரது எண்ணம். அதன் அனுமதிக்காக ஆட்சியரைச் சந்திக்கவும் முதல்வரைச் சந்திக்கவும் போராடுகிறார்....
இரணியல் அருகில் நுள்ளிவிளை பகுதி தண்டவாளத்தில் நேற்று(நவம்பர் 21) மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் பைக் உள்ளிட்டவை ரயில்வே மேம்பாலம் ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இறந்தவர் யார் என தெரியவில்லை. தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் லுங்கியும், அரைக்கைச் சட்டையும் அணிந்த நிலையில்...
“சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்” என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எதிர்மறை விமர்சனங்களால் ‘கங்குவா’ திரைப்படம் கடும்...
மாநாட்டில் விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சி தெரிவித்திருக்கிறார்.அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பேச்சு குறித்து அவரது தந்தை எஸ்.ஏசி, “மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். நான் இப்படி பேசுவார் என நினைக்கவே இல்லை. அரண்டு போய்விட்டேன்.
என் மகனின் வேகத்தை அன்று தான்...
கரு.பழனியப்பன் தனது கல்லூரிக் கால நண்பரும் சக இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை முன்வைத்து அவருக்கான கடிதம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். தியேட்டர்களில் எடுபடாத இந்தப் படத்தை அண்மையில் ஓடிடி-யில் பார்த்துவிட்டு திரைத் துறைப் பிரபலங்கள் பாராட்டி எழுதி வருகின்றனர்.
இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் கரு. பழனியப்பன், ‘உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் மேகநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 60.
தேசிய விருது பெற்ற மூத்த மலையாள நடிகர் பாலன் கே நாயரின் மகன் மேகநாதன். இவர் கடந்த 1983-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அஸ்திரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது வில்லன்...
தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகளுக்கு, கேட்டதும் தடையில்லா சான்றிதழ் வழங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என...










