கங்குவா’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து, மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் ‘கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்குகிறார். இதில் திரவுபதியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கான டெஸ்ட் ஷூட் 2 முறை நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யாவுடன் ஜான்வி நடிப்பதை அவர் தந்தை போனி கபூர் உறுதி செய்துள்ளார்.இதுபற்றி அவர்...
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களில் ஒன்று ‘கதாநாயகி’. ராம்நாத் இயக்கிய இந்த ரொமான்டிக் காமெடி படத்தில், அந்தக் காலகட்டத்தில் ஹீரோ, காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகனாக நடித்தார். நாயகியாகப் பத்மினி நடித்தார். கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம், டி.கே.ராமச்சந்திரன், கே.எஸ்.அங்கமுத்து, ஏ.கருணாநிதி, எஸ்.ராமாராவ் உட்பட பலர் நடித்தனர்.
திரைக்கதை, வசனத்தை டி.கே.கோவிந்தன் எழுதினார். ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்குத் தஞ்சை ராமையா தாஸ், சுரதா,...
“அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டும் சிறந்த மனிதர் வெற்றி துரைசாமி” – வெற்றிமாறன் உருக்கம்
admin - 0
“எப்போதும் சிரித்துக்கொண்டு, அன்புடன் பழகும் மனிதர். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுடனும் அன்பாக இருக்கும் மனிதர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு” என இயக்குநர் வெற்றிமாறன் கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார்.திரைப்பட இயக்குநர் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “வெற்றி துரைசாமி சினிமா தொடர்பான இடங்களில் தன்னை அறிமுகப்படுத்தும்போது, என்னுடைய மாணவர் என்று தான் அறிமுகம் செய்வார். என்னிடம்...
மார்வல், டிசி, டிஸ்னி , நரூட்டோ என்ற அனிமி உட்பட பல்வேறு காமிக் கதாபாத்திரங்கள் உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன.இந்நிலையில் இந்த காமிக்ஸ் ரசிகர்களுக்காக, சென்னையில் முதன்முறையாக 'காமிக் கான்' நிகழ்வுநடத்தப்படுகிறது. கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அடிப்படையிலான தொடர் நிகழ்ச்சியான இது, சர்வதேச அளவில் பிரபலமானது. 'காமிக் கான் இந்தியா' அமைப்பு நடத்தும் இந்நிகழ்வு இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் எற்கெனவே நடைபெற்றுள்ளன. இப்போது முதன்முறையாக சென்னையில்...
‘டான்ஸிங் ரோஸ்' ஷபீர் கல்லரக்கல், மிர்ணா, தீப்தி, இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ள படம், 'பர்த்மார்க்'. ஸ்ரீராம் சிவராமன் தயாரித்துள்ள இந்தப் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதர் கூறியதாவது:இயற்கை முறை பிரசவம் பற்றி பேசும்படம் இது. அறுவைசிகிச்சை இல்லாமல் இயற்கையான பிரசவத்துக்கு இந்தியாவில் சில கிராமங்கள்...
மத நல்லிணக்கத்துக்கு சான்று அபுதாபி சுவாமி நாராயண் கோயில் – திறப்பு விழாவில் பங்கேற்ற சரத்குமார் நெகிழ்ச்சி
admin - 0
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயில் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு சான்றாக உள்ளதாக கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.அபுதாபியில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி நேற்று (பிப்.14) திறந்துவைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற பூஜைகளிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல், திரைப் பிரபலங்கள் கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற நடிகரும், சமத்துவ மக்கள்...
சென்னையில் தடுக்கி விழுந்த இடங்களில் எல்லாம் சினிமா ஸ்டூடியோக்கள் இருந்த காலம் ஒன்று உண்டு. சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் அப்போது இருந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்றிருக்கின்றன. அதில் கிண்டியில் இருந்த நரசு ஸ்டூடியோவும் ஒன்று. பிரபலமான நரசுஸ் காபி நிறுவனத்தின் அதிபர் வி.எல்.நரசுவின் ஸ்டூடியோ இது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களின் படப்பிடிப்புகள் நடந்த இந்த ஸ்டூடியோ, பிறகு...
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான சரத்குமாரின் ‘கம்பீரம்’ படத்தின் காமெடி காட்சியில் ரெய்டு செல்லும் வடிவேலு உடைகள் களையப்பட்டு மூலையில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை உற்றுநோக்குபவரிடம், ‘அவனா நீ’ என ஒருவித நக்கல் தொனியுடன் கேட்பார் வடிவேலு. இந்தக் காட்சியைப் பார்த்து சிரிக்காதவர்கள் இல்லை. இதன் எதிரொலி சமூகத்திலும் பிரதிபலித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பால்புதுமையினரை தமிழ் சினிமா ‘அவனா நீ’ என கேலி கிண்டலுடன் அணுகியிருக்கிறது. பெரும்பாலானா படங்களை...
தேசிய திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக இருந்த சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஆகிய பிரிவுகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
தேசிய விருதுகள் மற்றும் பரிசுத் தொகைகளை சீரமைப்பதற்கான குழு ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையில் பேரில், 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சில...
ஜாலி வசனங்களும், ஈர்க்கும் இசையும் – வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ டீசர் எப்படி?
admin - 0
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் நடித்துள்ள ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ மலையாளப் படத்தின் டீசரை மோகன்லால் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை எட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள மலையாள படம்...










