குமாரகோவில் முருகன் கோயிலில் வைகாசி திருவிழா ஆராட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குமாரகோவில் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருஆறாட்டு நிகழ்ச்சி தந்திரிஸ்ரீ ராமரு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
மணவாளகுறிச்சி: மனைவி, மாமனாரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் மனைவி சிவகலா (32). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். இதனை அறிந்த சிவகலாவின் தந்தை ராஜன் மருமகனைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டீபன் மாமனாரைத் தாக்கினார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்...
ஆளூர்: சாலையில் கழிவு… சுகாதாரச் சீர்கேடு
காரங்காட்டில் இருந்து ஆளூர் செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் கட்டிமாங்கோடு ஊராட்சிப் பகுதியிலிருந்து சேமிக்கப்படும் குப்பைகள் குவித்து வைக்கப்படுவதும், பின்பு எரிக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோன்று தெரு நாய்கள் குப்பைகள், இறைச்சி, உணவுக் கழிவுகளைக் கிளறுகின்றன. எனவே இப்பகுதியில்...
பேச்சிப்பாறை: அணை நீர் திறப்பு 500 கன அடியாக அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் 1ஆம் தேதி பேச்சிப்பாரை அணை நீர் திறந்து விடப்பட்டது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் பல பகுதிகளில் கால்வாய் துவாரும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் கால்வாயில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் மட்டுமே...
இரணியல்: ஆட்டோ கவிழ்ந்து பெண் படுகாயம்
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் மனைவி மேரி பாய் (57). நேற்று காலை இவர் ஆட்டோவில் திங்கள்நகர் பகுதிக்கு வந்தார். பின்னர் மதியம் அங்கிருந்து ஆட்டோவில் திரும்பி வரும்போது குழியூர் என்ற பகுதியில் வைத்து ஆட்டோ எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேரி...
குமரி: கடற்கரையில் ஒதுங்கிய சோப் ஆயில் பேரல்
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்குச் சென்ற லைபிரியா நாட்டுக் கப்பல் கடந்த மே 24ஆம் தேதி கடலில் கவிழ்ந்தது. இதிலிருந்து குமரி மாவட்டத்திலும் கண்டெய்னர் கரை ஒதுங்கியது. இந்த நிலையில், நேற்று சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல் இரவிபுத்தன்துறை கடற்கரைப் பகுதியில்...
அருமனை: சாலையில் சிதறிய வண்டல் மண்ணால் அபாயம்
அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு சென்று விளை நிலத்தில் கொட்டுகின்றனர். ஆனால் சில விளை நிலங்களுக்குள் வாகனம் உள்ளே நுழைய முடியாதபட்சத்தில் சாலையோரம் கொட்டிவிடுகின்றனர். இதனால் அந்த மண் சிதறி சாலையில் கிடக்கின்றது.
குறிப்பாக மஞ்சாலுமூடு பகுதியில் இருந்து...
கருங்கல்: போக்குவரத்து போலீசாரை நியமிக்க மனு
கருங்கல் காமராஜர் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக தற்காலிகப் பேருந்து நிறுத்தம் பேரூராட்சி மன்றத்தால் ஏற்படுத்தப்பட்டது. இதனால் கருங்கல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு அதனைத் தீர்ப்பதற்காக தினமும்...
குமரி: 15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பள்ளியை திறக்க கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. தற்போது இந்த பள்ளியை மீண்டும் திறந்து மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை...
குமரி: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பக்ரீத் பொருநாள் வாழ்த்து
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; தியாகத் திருநாளாம் ஈதுல் அழ்ஹா எனும் பக்ரீத் பெருநாளை மகிழ்ச்சியுடனும், உள்ளம் பூரித்தும் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் உன்னத...













