கருங்கல் காமராஜர் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக தற்காலிகப் பேருந்து நிறுத்தம் பேரூராட்சி மன்றத்தால் ஏற்படுத்தப்பட்டது. இதனால் கருங்கல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு அதனைத் தீர்ப்பதற்காக தினமும் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் எனக் கருங்கல் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையின் நகலை கருங்கல் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர்.