கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்குச் சென்ற லைபிரியா நாட்டுக் கப்பல் கடந்த மே 24ஆம் தேதி கடலில் கவிழ்ந்தது. இதிலிருந்து குமரி மாவட்டத்திலும் கண்டெய்னர் கரை ஒதுங்கியது. இந்த நிலையில், நேற்று சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல் இரவிபுத்தன்துறை கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியது.
இதைத்தொடர்ந்து, குளச்சல் கடலோர காவல் படை போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, அதில் சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தும் நறுமண ஆயில் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் அவற்றை மீட்டு தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள குடோனில் ஒப்படைத்தனர்.