கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் மனைவி மேரி பாய் (57). நேற்று காலை இவர் ஆட்டோவில் திங்கள்நகர் பகுதிக்கு வந்தார். பின்னர் மதியம் அங்கிருந்து ஆட்டோவில் திரும்பி வரும்போது குழியூர் என்ற பகுதியில் வைத்து ஆட்டோ எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் மேரி பாய் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் ஆட்டோவை அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவர் ஜெங்கின் சிங் (54) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.