குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடிக்காக கடந்த ஜூன் 1ஆம் தேதி பேச்சிப்பாரை அணை நீர் திறந்து விடப்பட்டது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் பல பகுதிகளில் கால்வாய் துவாரும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் கால்வாயில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டிருந்தது.
இதனால் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடையாமல் காணப்பட்டது. இந்த நிலையில் கால்வாய் துவாரும் பணிகள் நிறைவுபெற்று இன்று காலை முதல் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என நீர்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.