காரங்காட்டில் இருந்து ஆளூர் செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் கட்டிமாங்கோடு ஊராட்சிப் பகுதியிலிருந்து சேமிக்கப்படும் குப்பைகள் குவித்து வைக்கப்படுவதும், பின்பு எரிக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோன்று தெரு நாய்கள் குப்பைகள், இறைச்சி, உணவுக் கழிவுகளைக் கிளறுகின்றன. எனவே இப்பகுதியில் கொட்டப்பட்டும் எரிக்கப்பட்டும் கிடக்கும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். குப்பைகளைக் கொட்டாதவாறு எச்சரிக்கை பலகை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.