Google search engine

நித்திரவிளை: மாமியாருக்கு கொலை மிரட்டல்; மருமகன் மீது வழக்கு

எஸ் டி மாங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா (44) என்பவர், தனது மகள் பெமியை திருமணம் செய்துகொண்ட லெனின் (30) என்பவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். லெனின், கடந்த 21ம் தேதி மாமியாரையும் மனைவியின் தங்கையையும் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து, வீட்டில்...

மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம்

மொஹரம் பண்​டிகை தொடர் விடு​முறையையொட்டி சென்​னை​யில் இருந்து 1,432 சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: ஜூன் 26-ம் தேதி (மொஹரம் பண்​டிகை), 27-ம் தேதி (சனிக்​கிழமை), 28-ம் தேதி (ஞா​யிற்​றுக்​கிழமை)...

இருளப்பபுரத்தில் குடோனில் திடீர் தீ

நாகர்கோவில் இருளப்புரம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பழைய பொருட்கள் குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீயில் எரிந்து சாம்பலானது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில்...

இரணியல்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மடத்தட்டுவிளையைச் சேர்ந்த ஜெயபாலன் (54) என்பவர், வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2004-ம் ஆண்டு டேவிட் மைக்கேல் ராஜ் (27) என்பவரைக் கொலை செய்த வழக்கில், பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி நேற்று ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இரணியல் போலீசார்...

குமரி: மாயமான கல்லூரி மாணவியை கோவையில் மீட்ட போலீஸ்

திருவட்டாறு பகுதியை சேர்ந்த செலின் என்ற மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி கோவையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்தது...

திருவட்டாறு: தீயில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்

திருவட்டாறு அருகே அணைக்கரை பகுதியைச் சேர்ந்த 77 வயதான கோமதி, தனியாக வசித்து வந்தார். அவரது பேரன் தினசரி உணவு கொண்டு வந்து கொடுத்து வந்தார். நேற்று உணவு கொடுக்கச் சென்றபோது, மூதாட்டி தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து திருவட்டாறு போலீசாருக்குத் தகவல்...

கருங்கல்: கால்வாயில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

பாலூர் கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த 51 வயதான தொழிலாளி மோகன்தாஸ், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கால்வாய் கரையில் அமர்ந்திருந்தபோது தவறி கால்வாயில் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக...

நாகர்கோவில் பாலம் விரிவாக்க பணி மேயர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினச்சேரியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடர்ந்து இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணனும் உடனிருந்தார்.

குமரி: நிதி நிறுவன பெண் ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி

மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரதி (43) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியரின் வீட்டில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து திருட முயன்றுள்ளார். ரதி சத்தம் போட்டதால் திருடன் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு...

திருவட்டாறு: கோயில் அருகே டாஸ்மாக் கடை ; பாஜக போராட்டம்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடை, பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அதை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திருவட்டாறு ஒன்றிய பாஜக சார்பில் ஒன்றிய தலைவர் சுவாமிதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்