Google search engine

புதுக்கடை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி

புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (57) தனது தாயார் சரஸ்வதி (78) வீட்டில் தனியாக வசித்து வருவதை அறிந்திருந்தார். நேற்று முன்தினம் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், நேற்று வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சமையலறையில் சரஸ்வதி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து...

மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் விடுதியில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும் சுகாதார வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். விடுதிப் பணியாளர்கள் எப்போதும் உணவை சுத்தமாகவும்,...

இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் ; கலெக்டர் பார்வை

குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு...

குமரி: வழிப்பறி குற்றவாளிக்கு 3 வருட சிறை

குலசேகரம், செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவில் தலைவரிடம் 2022-ல் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த முத்தையா (23) என்பவருக்கு பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த...

குமரி: சிறுமிக்கு பாலியல்; குற்றவாளிக்கு குண்டாஸ்

மெதுகும்மெல் முண்டபிலாவிளை பகுதியைச் சேர்ந்த ஜோபின் (20) மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகி, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, சிறையிலிருந்தே ஜோபின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொல்லங்கோடு: பெட்ரோல் பங்கில் இறந்து கிடந்த ஊழியர்

கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் (65) என்பவர், சூழால் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். ஏற்கனவே தலையில் ரத்தக்கட்டு காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று அதிகாலை பெட்ரோல் பங்க் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொல்லங்கோடு போலீசார் உடலைக்...

குமரி: அறக்கட்டளை மேலாளர் மீது தாக்குதல்!

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள 'ஜீவ காருண்யா' அறக்கட்டளை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து, சமூக சேவை செய்யக் கூடாது என்று கூறி மேலாளர் ஷீபாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஒரு வாரமாக நடவடிக்கை இல்லாததால், இன்று (ஜூன்...

மேல்மிடாம்: நண்பன் மனைவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபர் கைது

மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் யோவான். இவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, யோவானின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் கெட்ட வார்த்தைகள் பேசி அந்தப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் சத்தம் போட்டதும்,...

இரணியல்: 49 மது பாட்டில்களுடன் 2 பேர் கைது

இரணியல் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 49 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வடசேரி பகுதியைச் சேர்ந்த...

மார்த்தாண்டம்: குளத்தின் கரை உடைப்பு; கும்பல் மீது வழக்கு

சிராயன்குழி பகுதியில் உள்ள பம்மக்குளம் குளத்தின் கரையை சிலர் சேதப்படுத்தியதாக நீர்வளத் துறைக்கு புகார் வந்துள்ளது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தின் கரை இடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேஷ் அளித்த புகாரின்...