குளச்சல்: கடலோர கிராமங்களில் போலீஸ் எஸ் பி கண்காணிப்பு
குமரி மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் 60 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இன்று முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. இதை அடுத்து நேற்று குளச்சல் அருகே உள்ள கோடிமனை கிராமம் முதல் தேங்காப்பட்டணம் வரையிலான பகுதிகளில் மாவட்ட...
திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண பதியில் சாமி ஊர்வலம்
திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண வைகுண்ட செல்லப்பதியில் 10 நாட்கள் திருஏடு வாசிப்பு விழா நேற்று இரவு நிறைவடைந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று இரவு, அய்யா அலங்கார கருட வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் புடை சூழ காங்கரை, திருவட்டாறு பகுதிகளில் இந்த பவனி நடைபெற்றது. பொதுமக்கள்...
பளுகல்: கோவிலில் அலுவலக பூட்டை உடைத்து ரூ. 50, 000 திருட்டு
பளுகல் அருகே நெய்தல்வேலி பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலில், நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்த நிலையில், நேற்று காலை கோயில் அலுவலக கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டது. உள்ளே மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, அதிலிருந்து சுமார் ₹50,000 திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம்...
நித்திரவிளை: ஆற்றில் மாயமான வாலிபர்.. 3-ம் நாள் உடல் மீட்பு
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த அபி (22) என்பவர், 12-ம் தேதி நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்தபோது ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். அதிக நீர்வரத்து காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்த கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 3 நாட்களாக...
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லாமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி...
செம்மாங்குளம் புனரமைப்புப் பணிகளை கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சி ஒழுகினசேரி பகுதியிலுள்ள 18 ஏக்கர் பரப்பளவிலான செம்மாங்குளம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொட்டும் மழையிலும் நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரசாந்த் கிருஷ்ணா, அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் அக்சயா...
இரணியல்: பணம் மோசடி -தம்பதி மீது வழக்கு
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (32) என்பவரிடம், இரணியல் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜெயராஜ், துபாயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவரது மனைவி லிபினாவின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சத்தை பெற்றுள்ளார். வேலை வாங்கி கொடுக்காததால் ஏமாற்றமடைந்த ஜெயக்குமார், குமரி எஸ்பி-யிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில், இரணியல் போலீசார் ஸ்டாலின் ஜெயராஜ் மற்றும்...
பேச்சிப்பாறை: அணை நீர்மட்டம் 35 அடியை தாண்டியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 35 அடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு...
நித்திரவிளை: ஆற்றில் வாலிபர் மாயம் ; 2-ம் நாளாக தேடுதல்
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 22 வயது அபி, சென்னையில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரில் உள்ளார். நேற்று மதியம் நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால், அபி நீந்த முடியாமல் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் கொல்லங்கோடு...
பேயங்குழி: இரட்டைக்கரை கால்வாய் கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் இன்று 11-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கால்வாயில் தூர்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர்...













